சீனியர்னா என்ன? பெர்ஃபார்ம் பண்ணுங்கப்பா- தாக்கிய ஜாகீர் கான்

ஜாகீர் கான்.

இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பி வருவதையடுத்து முன்னாள் லெஜண்ட் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 • Share this:
  இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பி வருவதையடுத்து முன்னாள் லெஜண்ட் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  சீனியர் வீரர்களான புஜாரா, ரகானே, கோலி சொதப்பி வருகின்றனர், இதில் கோலி ஒரு 40+ ஸ்கோரையும் ஒரு அரைசதமும் எடுத்துள்ளார், இப்போது ஓவலில் அரைசதம் எடுத்து ஆடிவருகிறார்.

  புஜாரா 91 ரன்களை எடுத்து தன் இடத்தைத் தக்கவைத்தார், ரகானே ஒரேயொரு அரைசதத்துடன் அதிகபட்ச ஸ்கோராக 61 ரன்களை மட்டுமே எடுத்து தொடரில் ஜடேஜாவைவிடவும் குறைவாக 95 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

  இதனையடுத்து ஜாகீர் கான் சீனியர் வீரர்களுக்கு செக் வைக்க வேண்டும் என்ற விதத்தில், பழம்பெருமையைப் கொண்டிருக்க முடியாது. தற்போதைய செயல்பாடும் அவசியம். இதன் காரணமாக அணியில் மூத்த வீரர்களாக இருந்தாலும் இளம் வீரர்களுக்கு ஏற்ப சரியான போட்டி அளிப்பது முக்கியம். ஒரு அணியில் மூத்த வீரராக இருப்பது இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். அதே வேளையில் அணியில் இருக்கக் கூடிய வாய்ப்பையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஜாகீர் கான் கூறியுள்ளார்.

  அணி இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதால் இந்த டெஸ்ட் போட்டியில் எப்படி மீண்டு வருவது என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளது. சீனியர் வீரர்கள் அணியில் பலகாலம் ஆடியிருக்கலாம், அதற்காக பழைய சாதனைகளையே அசைப் போட்டுக் கொண்டிருக்க முடியுமா? தற்போது எப்படி ஆட வேண்டும் என்பதும் முக்கியம்.

  என்று ஜாகீர் கான் கூறியுள்ளார்.

  இதற்கிடையே ஓவல் டெஸ்ட் போட்டியில் 50 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆலி ராபின்சனின் அற்புதமான பந்துக்கு ஆட்டமிழந்து பெவிலியன் சென்றார். 96 பந்துகள் சந்தித்து 8 அபார பவுண்டரிகள் ஒரு லைஃபுடன் கோலி 50 எடுத்து ஆட்டமிழந்து படு வேதனையுடன் பெவிலியன் சென்றார்.

  தற்போது ரகானே 5 ரன்கள் உடனும், ரிஷப் பந்த் ரன் எடுக்காமலும் ஆடி வருகின்றனர். இங்கிலாந்து தரப்பில் ஆலி ராபின்சன் 2 விக்கெட்டுகளையும் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: