• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சுத்தப் பைத்தியக்காரத்தனம்: அஸ்வின் விவகாரத்தில் மைக்கேல் வான் தாக்கு

சுத்தப் பைத்தியக்காரத்தனம்: அஸ்வின் விவகாரத்தில் மைக்கேல் வான் தாக்கு

ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திர அஷ்வினைத் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கண்டித்துள்ளார்.

  • Share this:
    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திர அஷ்வினைத் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கண்டித்துள்ளார்.

    4-வதுடெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. ஓவல் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், 2-வது இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும என்பதால், அஷ்வின் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என பலதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

    ரவிந்திர ஜடேஜாவுக்கு 4 டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கிவரும் கோலி, அஷ்வினுக்கு இந்த டெஸ்டிலும் வாய்ப்பு வழங்கவில்லை. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கேப்டன் கோலியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் காட்டமாக விமர்சித்துள்ளார்.

    Also Read: Ind vs Eng, 4th test: ரோகித் சர்மா, ராகுல், புஜாரா அவுட்- மீண்டும் ஒரே பார்முலா; சிக்கலில் இந்தியா

    “ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திர அஸ்வினைத் விளையாடும் 11 பேர் இந்திய அணியில் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம். அஸ்வினைத் தேர்வு செய்யாதது என்பது, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இதுவரை நாங்கள் பார்க்காத மிகப்பெரிய 4 டெஸ்ட் போட்டிகளாக இருக்கும். 413 டெஸ்ட் விக்கெட், 5 டெஸ்ட் சதங்கள் எடுத்தவர் அஷ்வின்!!” எனத் தெரிவித்துள்ளார். மேலும், #இங்கிvஇந்தியா பைத்திக்காரத்தனம் என்ற ஹேஷ்டேக்கையும் பதிவி்ட்டுள்ளார்.

    இதற்கிடையே இந்திய அணியின் டாப் ஆர்டர் மீண்டும் சொதப்ப ரோகித் சர்மா, புஜாரா, ராகுல் விரைவில் பெவிலியன் திரும்ப, விராட் கோலி ரூட் விட்ட கேட்சுடன் 23 ரன்களுடனும் ரகானேவை இறக்காமல் இன்னொரு பைத்தியக்காரத்தனமாக ஜடேஜாவை இறக்கியும் விராட் கோலி இன்னொரு ‘திறமை’ காட்டியுள்ளார்.

    ரகானே பார்முக்கு வருவது நல்லது, ஜடேஜா என்ன செய்யப் போகிறார்?- ரகானேவுக்குப் பதில் ஜடேஜாவை முன்னால் இறக்கி இடது, வலது காம்பினேஷன் செய்கிறோம் என்று ஒரு சப்பைக் கட்டை கோலி கட்டுவார். ஜடேஜா இதுவரை திண்டாடி கடைசியில் 10 ரன்களில் வெளியேறினார். வோக்ஸ் அவர் விக்கெட்டை வீழ்த்த இந்தியா உணவு இடைவேளைக்குப் பிறகு 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்துள்ளது .

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: