• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விராட் கோலி, ரவி சாஸ்திரி மீது பிசிசிஐ கடும் அதிருப்தி

விராட் கோலி, ரவி சாஸ்திரி மீது பிசிசிஐ கடும் அதிருப்தி

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது குறித்து பிசிசிஐ கோலி மற்றும் ரவிசாஸ்திரி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சி குறித்து கடும் அதிருப்தியில் உள்ளது.

  • Share this:
    இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது குறித்து பிசிசிஐ கோலி மற்றும் ரவிசாஸ்திரி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சி குறித்து கடும் அதிருப்தியில் உள்ளது.

    இவர்களுக்குக் கொரோனா வந்ததன் காரணம், இவர்கள் லண்டனில் கடந்த வாரம் கூட்ட நெரிசல் அதிகமுள்ள புத்தக அறிமுகக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரவிசாஸ்திரி, பாரத் அருண், ஸ்ரீதர் ஆகியோருக்கு கொரோனா தாக்க, ஃபிசியோ நிதின் படேல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர்கள் அனைவருமே 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாது. வெள்ளிக்கிழமை மான்செஸ்டரில் 5வது டெஸ்ட் நடைபெறுகிறது.

    இந்நிலையில் கேப்டன் விராட் கோலி, சில வீரர்கள், பயிற்சியாளர்கள் லண்டனில் புத்தக அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோவிட் ஆபத்தில் சிக்கியதாக பிசிசிஐ கடும் அதிருப்தி எழுப்பியுள்ளது. அனுமதியும் பெறாமல் பயோபபுளை விட்டு வெளியே வந்து புத்தக அறிமுக விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக ஆங்கில முன்னணி ஊடகம் ஒன்றிற்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறிய போது “இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் பிசிசிஐ-யிடம் பகிரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்த்தினால் கிரிக்கெட் வாரியம் தர்ம சங்கடமடைந்துள்ளது. ஓவல் டெஸ்ட் முடிந்தவுடன் இதற்கான விளக்கத்தை கோலியும் ரவிசாஸ்திரியும் அளிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப் படுவார்கள். அணியின் நிர்வாக மேலாளர் கிரிஷ் டோங்ரேயின் பங்கும் என்னவென்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
    இவர்கள் செய்த காரியத்தினால் அடுத்த டெஸ்ட் போட்டி சிக்கலுக்குள்ளாகமல் நடக்க வேண்டும் என்ற கவலை ஏற்பட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ தொடர்பில் இருந்து வருகிறது. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்த கூட்டம் புதனன்று நடைபெறுகிறது, அப்போது இந்த விவகாரம் எழுப்பப்படும் என்று தெரிகிறது.

    ஏற்கெனவே ரிஷப் பந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதே ஜெய் ஷா எச்சரித்திருந்தார், கூட்டமான பகுதிகளை தவிருங்கள் என்று. ரிஷப் பந்த் யூரோ கோப்பை கால்பந்து தொடருக்குச் சென்று வந்து கொரோனாவில் சிக்கினார். இந்நிலையில் பயிற்சியாளர்களுக்கு கொரோனா வந்தது குறித்து வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீது பிசிசிஐ கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: