உண்மை இதுதான், ‘இந்திய பவுலிங் வேர்ல்ட் கிளாஸ்’- ஜோ ரூட் ஒப்புதல்

ஜோ ரூட்

ஓவல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் மீண்டும் ஒரு அட்டகாசமான பிரஷர் பவுலிங்கை வீசி இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றது.

 • Share this:
  உணவு இடைவேளைக்குப் பிறகு ஜடேஜா மிகப்பிரமாதமாக பவுலர்களின் காலடித் தடங்களை சாதகமாக்கி ஹமீத் ஹசீபையும், மொயின் அலியையும் வீழ்த்த ஜஸ்பிரித் பும்ரா உண்மையில் அச்சுறுத்தும் இன்ஸ்விங்கிங் யார்க்கர்களில் ஆலி போப், ஜானி பேர்ஸ்டோவைக் காலி செய்ய ஆட்டம் மாறிப்போனது. இதுதான் திருப்பு முனை ஏற்படுத்தியது. அதிலும் பும்ரா 6 ஓவர் 6 ரன்கள் 2 விக்கெட். தேநீர் இடைவேளைக்குப் பிறகு உமேஷ் யாதவ் அவசரம் அவசரமாக இங்கிலாந்தை முடித்து வைத்தார்.

  டேவிட் மலான் 5 ரன்களில் ரன் அவுட் ஆனது தேவையில்லாதது, டி20 கிரிக்கெட்டிலும் அங்கு சிங்கிள் இல்லை என்றார் சுனில் கவாஸ்கர். உண்மையில் இந்தத் தோல்வி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கு பெரிய சோகம்தான். அவரே கூறுவது போல் வெறுப்பாகவே இருக்கும். தொடக்க ஜோடி 100 ரன்களைச் சேர்க்க அடுத்த 10 விக்கெட்டுகளை 110 ரன்களுக்கு இழப்போம் என்று சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக பந்துகள் ரிவர்ஸ் ஆகத் தொடங்கியதும் பும்ரா ஒரு பெரிய அச்சுறுத்தல் பவுலராக மாறிவிட்டார்.

  இந்நிலையில் இங்கிலாந்து கேட்பன் ஜோ ரூட் கூறியதாவது: “உண்மையில் வெறுப்பாகவே இருக்கிறது. வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே நினைத்தோம். ஆனால் இந்தியாவுகு பாராட்டுக்கள். பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தனர், இதுதான் திருப்பு முனை. முதல் இன்னிங்ஸ் முன்னிலையிலிருந்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். வாய்ப்புகளை உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக ஆடும் போது பயன்படுத்த வேண்டும்.

  Also Read: Ind vs Eng Oval win| என் கிட்ட பந்தைக் கொடுங்க என்றார் பும்ரா: கிரேட் வின் பற்றி விராட் கோலி பெருமிதம்

  ரிவர்ஸ் ஸ்விங்கை இன்னும் கொஞ்சம் சிறப்பாகக் கையாண்டிருக்க வேண்டும். எதார்த்த உணர்வுடன் ஆட வேண்டும், உண்மை இதுதான், இந்த இந்தியப் பந்து வீச்சு உண்மையில் உலகத் தரம் வாய்ந்தது என்பதை உணர வேண்டும். டாஸ் பற்றி கேட்டால் தோற்கும் போது அது பற்றிய கேள்வி எழவே செய்யும். இன்னும் கொஞ்சம் நாங்கள் கறாராக ஆடியிருக்க வேண்டும், கருணையின்றி ஆடியிருக்க வேண்டும். 200 ரன்கள் முன்னிலையாக மாற்றியிருக்க வேண்டும்.

  பும்ரான்னா பயம்.


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  துல்லியத் தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை ஆடினோம், இதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். ” என்றார்.
  Published by:Muthukumar
  First published: