ஷமி, பும்ராவை வரவேற்க ஒட்டுமொத்த இந்திய அணியே படியிறங்கி வந்த மெய்சிலிர்ப்புத் தருணம்

ஓய்வறையில் இந்திய வீரர்கள் கொண்டாட்டம்

மெக்கா ஆஃப் கிரிக்கெட் ஆன லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தின் பவுன்சர்கள் உத்தியை சிறப்பாக முறியடித்து போர் வீரர்கள் போல் வந்த ஷமி, பும்ராவை வரவேற்க லார்ட்ஸ் ஓய்வறையிலிருந்து அத்தனை வீரர்களும் படியிறங்கி வந்து வரவேற்றனர்.

 • Share this:
  மெக்கா ஆஃப் கிரிக்கெட் ஆன லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தின் பவுன்சர்கள் உத்தியை சிறப்பாக முறியடித்து போர் வீரர்கள் போல் வந்த ஷமி, பும்ராவை வரவேற்க லார்ட்ஸ் ஓய்வறையிலிருந்து அத்தனை வீரர்களும் படியிறங்கி வந்து வரவேற்றனர்.

  209/8-லிருந்து ஷமி, பும்ரா இங்கிலாந்தின் தேவையற்ற ஆளடிப்பு பவுன்சர்கள் உத்தியை எதிர்கொண்டு நின்று 89 ரன்களை 20 ஓவர்களில் சேர்க்க இந்தியா தோல்வி நிலையிலிருந்து வெற்றியை ருசிக்கும் தருணத்தை கண்டது. ஷமி அபாரமாக தன் அதிகபட்ச ஸ்கோரை எடுத்து அதிரடி அரைசதம் கண்டார் பும்ரா தன் பங்குக்கு 34 ரன்களைச் சேர்த்தார்.  இந்தியாவை தோல்வியின் பிடியிலிருந்து மீட்டதையடுத்து வெற்றிக்கு ஆக்ரோஷம் காட்டி பும்ரா, ஷமி இருவரும் வந்தவுடனேயே விக்கெட்டுகளைச் சாய்க்க இஷாந்த்சர்மா, சிராஜ் உள்ளே புக இங்கிலாந்து கதை முடிந்தது, 60 ஒவர்களில் பினிஷ் ஆனது வேறு கதை.

  Also Read: எப்படியிருந்தாலும் 60 ஓவர்களில் இங்கிலாந்தை ‘ஃபினிஷ்’செய்வதே திட்டம்: விராட் கோலி பெருமிதம்

  ஷமி, பும்ராவின் ஹீரோயிசத்தைப் பாராட்டும் விதமாக ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் லார்ட்ஸ் பால்கனியிலிருந்து படியிறங்கி வந்தனர். விராட் கோலி காட்டுக்கூச்சல் போட்டார், சிராஜ் விசில் அடித்துக் கொண்டிருந்தார். ரவி சாஸ்திரி இருவரையும் தட்டிக் கொடுத்தார்.

  Also Read: Lords test India win|ஆண்டர்சனுக்காக பழிதீர்க்கப் போய் பல்பு வாங்கிய இங்கிலாந்து: இந்திய ஆக்ரோஷத்துக்கு சரணடைந்து படுதோல்வி

  ஆண்டர்சனுக்கு பவுன்சர்கள் வீசி பும்ரா காயப்படுத்திய சம்பவத்திலும் விராட் கோலி ஆண்டர்சனிடம் ‘இது உங்கள் வீட்டுக் கொல்லைப்புறம் அல்ல’ என்று கூறியதும் இங்கிலாந்தை வெறுப்பேற்றியது, ஆனால் எதிர்மறையாக அவர்கள் ஆட்டத்தை ஆடி தோற்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஷமி, பும்ராவுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
  Published by:Muthukumar
  First published: