குல்தீப் யாதவ் கழுத்தை கோபமாக பிடித்த முகமது சிராஜ்... டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன? வைரல் வீடியோ

குல்தீப் யாதவ் கழுத்தை கோபமாக பிடித்த முகமது சிராஜ்... டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன? வைரல் வீடியோ

வீடியோ காட்சிகள்

Inida vs England | முதல் நாள் ஆட்ட நேரம் முடிந்து இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூம் திரும்பினார். அப்போது சிராஜ் குல்தீப் யாதவ்வின் கழுத்தை வேகமாக பிடித்து இழுத்தார்.

 • Last Updated :
 • Share this:
  சென்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் டிரெஸ்ஸிங் ரூமில் குல்தீப் யாதவ் கழுத்தை கோபமாக பிடித்த முகமது சிராஜ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த பின் இந்திய அணி தற்போது இங்கிலாந்து எதிராக சென்னை டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் விளாசி இங்கிலாந்தை வலுவான நிலைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களில் பவுலிங் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

  இதனிடையே சென்னை டெஸ்ட்டில் முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் மோதி கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் இருவரும் சென்னை டெஸ்டில் அணியில் இடம்பெறவில்லை. முதல் நாள் ஆட்ட நேரம் முடிந்து இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூம் திரும்பினார். அப்போது சிராஜ் குல்தீப் யாதவ்வின் கழுத்தை வேகமாக பிடித்து இழுத்தார்.  இந்த வீடியோ டிவிட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படமால் இருப்பதால் விளையாட்டாக இருவரும் சண்டை போட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

  இதனிடையே சென்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 218 ரன்கள் எடுத்தார்.

   
  Published by:Vijay R
  First published: