• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Ind vs Eng | முகமது சிராஜை பங்கமாய் கலாய்த்த வாஷிம் ஜாஃபர்

Ind vs Eng | முகமது சிராஜை பங்கமாய் கலாய்த்த வாஷிம் ஜாஃபர்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை பங்கமாய் கலாய்த்து வாஷிம் ஜாஃபர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 364 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 129 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 119 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 2 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அதேப்போன்று இந்திய அணியின் 2 டி.ஆர்.எஸ்களையும் அவர் வீணடித்துள்ளார்.

    முகமது சிராஜ் ஆக்ரேஷமாக பந்துவீசினாலும் அவரது ஆர்வ கோளாறு காரணமாக இந்தியா 2 டிஆர்எஸ் வாயப்புகளை இழந்துள்ளது. ரிஷப் பந்த டி.ஆர்.எஸ் எடுக்க வேண்டாம் என்று விராட் கோலியிடம் சொன்ன போதும் அவர் டி.ஆர்.எஸ் வாய்ப்புக்கு சென்றார். ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ஆகியோரிடம் ஆலோசிக்காமல் விராட் கோலி டி.ஆர்.எஸ் வாய்ப்புக்கு சென்றார்.

    டி.ஆர்.எஸ் வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டதால் கோலி மற்றும் சிராஜை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபரும் முகமது சிராஜை விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் , டி.ஆர்.எஸ் என்பதற்கு புது அர்த்தம் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, DRS: Don't Review Siraj. சிராஜ் ரிவியூவ் வேண்டாம் என்றுள்ளார்.











    முகமது சிராஜ் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் களத்தில் அவர் நடந்து கொள்ளும்விதம் பக்குவமாக இல்லையென்று பலர் சிராஜை விமர்சித்து வருகின்றனர். இந்தியாவின் டி.ஆர்.எஸ் வாய்ப்புகள் சிராஜின் அவசரத்தால் பல முறை வீணடிக்கப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: