ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

India Playing XI : அரையிறுதியில் இந்திய அணியில் விளையாடபோகும் வீரர்கள் யார்?

India Playing XI : அரையிறுதியில் இந்திய அணியில் விளையாடபோகும் வீரர்கள் யார்?

தினேஷ் கார்த்திக் & ரிஷப் பந்த்

தினேஷ் கார்த்திக் & ரிஷப் பந்த்

இந்திய அணியை பொறுத்த வரை கடந்த போட்டியில் ஆடிய வீரர்கள் ஆடாவும் ஒன்று இரண்டு மாற்றங்கள் மாறவும் வாய்ப்புள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேனா இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார் என இந்த தொகுப்பில் பார்போம்.

  ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை அடிலெய்ட்டில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் நாளைய ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அது ,மட்டும் அடிலெய்ட் மைதானம் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இரு அணிகளுமே அதற்கு ஏற்றபோல் வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

  குறிப்பாக இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் இந்தியாவுடனாக போட்டியில் அவர் ஆடுவது சற்று வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதனால் அவருக்கு பதிலாகவும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோடர்ன் இங்கிலாந்து அணியில் ஆடும் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

  இங்கிலாந்து அணியில் பேட்டிங் வரிசையில் தற்போது மிகப்பெரிய அடி அவர்களுக்கு விழுந்துள்ளது. உலகின் டாப் ரேங்கில் உள்ள டி20 பேட்ஸ்மேன் டேவிட் மலானுக்கு தற்போது உடற்தகுதி பிரச்னை உள்ளதால் அவரும் இங்கிலாந்து அணியில் இடம் பிடிக்க கிடைக்காது.இது இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும்.

  இதையும் படிங்க: இந்தியா -இங்கிலாந்து போட்டியில் மழை வருமா? முழு வானிலை ரிப்போர்ட் இதோ

  இந்திய அணியை பொறுத்த வரை கடந்த போட்டியில் ஆடிய வீரர்கள் ஆடாவும் வாய்ப்புள்ளது. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கே அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் இங்கிலாந்து அணியுடன் நல்ல ஸ்ரைக் ரேட் இருப்பதால் ரிஷப் பந்தே அணியில் தொடரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேபோல் அக்‌ஷர் பட்டேலுக்கு பதிலாக தீபக் ஹோடா இடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

  இந்திய உத்தேச அணி: கே.எல்.ராகுல், ரோகித்சர்மா (கே), விராட்கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக்பாண்டியா, ரிஷப் பன்ட் (அ)தினேஷ் கார்த்திக், அக்சர்பட்டேல்(அ) தீபக் ஹூடா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

  இங்கிலாந்து உத்தேச அணி : பட்லர் (கே), ஹேல்ஸ், பில்சால்ட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், சாம்கரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க்வுட் (அ) கிறிஸ் ஜோர்டன்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India Vs England, T20 World Cup