• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • மச்சான், நான் ஊருக்கு போகட்டுமா?- கோலியிடம் அஸ்வின் கூறுவதாக வாட்ஸ் அப் ஜோக்

மச்சான், நான் ஊருக்கு போகட்டுமா?- கோலியிடம் அஸ்வின் கூறுவதாக வாட்ஸ் அப் ஜோக்

கோலி - அஸ்வின்

கோலி - அஸ்வின்

ஓல்ட் டிராபர்டில் வெள்ளிக்கிழமையன்று தொடங்கும் 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றிக் கூட்டணியை கோலி மாற்ற விரும்ப மாட்டார், யுகயுகமாக இருக்கும் ஐதீகம் அது. எனவே ரகானே இருப்பார் அஸ்வின் முழுத்தொடரிலும் உட்கார வைக்கப்பட்ட ‘பெருமையை’ கோலி அடைவார்.

 • Share this:
  ரசிகர்கள் ஒன்றைத் தவறாக புரிந்து வைத்துள்ளனர், ஜடேஜாவின் இடத்தை கேள்வி கேட்காமலேயே அஸ்வின் ஏன் உட்கார வைக்கப்பட்டார் என்ற கேள்வியை கேட்க முடியும் என்பதே விஷயம். சுனில் கவாஸ்கர் ஒருமுறை கூறியது போல் அஸ்வின் கேப்டனின் அணி நிர்வாகத்தின் உத்திகளை, திட்டங்களை ஏற்பவர் அல்ல, அணி கூட்டங்களில் தன் கருத்தைத் தைரியமாக எதிர்த்துக் கூறுபவர் என்றார் கவாஸ்கர்.

  ஆகவே அஸ்வின் உட்கார வைக்கப்படுவது கிரிக்கெட் காரணங்களுக்காக அல்ல, கிரிக்கெட் அல்லாத காரணங்களுக்காகவே என்று பலரும் அபிப்ராயப்படுகின்றனர்.
  இந்நிலையில் 5வது டெஸ்ட்டிலும் வின்னிங் காம்பினேஷனை மாற்ற விரும்ப மாட்டார் கோலி. எனவே ரகானே நீடிப்பார் அஸ்வின் முழுத் தொடரிலும் முற்றொழிப்பு செய்யப்படுவார் என்பதே செய்தியாக உள்ளது.

  இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியில் ஜோக் ஒன்று உலா வருகிறது. அதாவது அஸ்வின் கூறுவது போன்று அமைக்கப்பட்ட வாசகத்தில் “மச்சா விராட் நான் வீட்டுக்குப் போகட்டுமா? என் குடும்பத்தோடு விநாயகச் சதுர்த்தியையாவது கொண்டாடுறேன்” என்று பகிரப்பட்டு வருகிறது. இது ஜோக் என்றாலும் இதுதான் உண்மை நிலை.

  எனவே இங்கிலாந்தில் மைதானத்தில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குப் பிறகு கால் பதிக்காமலேயே அஸ்வின் ஐபிஎல் போட்டிகளுக்கு வருவார் என்றே தெரிகிறது. ஓவலில் ஜடேஜா விக்கெட் எடுத்தார் என்றால் அது ஜடேஜாவின் திறமையினால் அல்ல இங்கிலாந்தின் ஹசீப் ஹமீது, மொயின் அலியின் தப்புத் தப்பான ஆட்டத்தினால்தான்.

  உலகத்தரம் வாய்ந்த ஒரு ஸ்பின்னரை உட்கார வைத்து அழகுப் பார்ப்பதில் கோலிக்கு நிகர் கோலிதான். கோலியின் அதிர்ஷ்டம், ஆஸ்திரேலியா பலவீனமடைந்தது, இங்கிலாந்து பலவீனமடைந்தது, இவர் வெற்றி பெறுகிறார். வயதானவர் என்று கோலி கிண்டலடித்த ஆண்டர்சனையே இவரால் ஆட முடியவில்லை, ரகானே, புஜாராவினால் ஆட முடியவில்லை, ராகுல் ஆடமுடியவில்லை, இப்படியிருக்கையில் ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

  பென் ஸ்டோக்ஸ் மிடில் ஆர்டரில் இருந்திருந்தால் இந்திய பவுலிங் என்ன ஆகியிருக்கும் என்பதெல்லாம் பேசப்பட வேண்டிய விஷயங்கள். இங்கிலாந்தின் தொடக்கம் மிக மோசமாக உள்ளது. ஓவலில் அடித்த செஞ்சுரி பார்ட்னர்ஷிப் பற்றி பேசிப்பயனில்லை. உண்மையில் அஸ்வின் இருந்திருந்தால் ஓவல் டெஸ்ட் 5ம் நாள் உணவு இடைவேளைக்கு முன்பே முடிந்திருக்கும்.

  ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் இந்தியா சிறப்பாக ஆடியதில்லை. இங்கு 9 டெஸ்ட் போட்டிகளில் 4-ல் தோற்று 5-ல் ட்ரா செய்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் தன் முதல் சதத்தை (119) இங்குதான் எடுத்தார். டெஸ்ட் ட்ரா ஆனது இல்லையெனில் இங்கும் உதைதான். கடைசியாக ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட்டில் ஆடிய போது ஜடேஜா 36 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் அஸ்வின் 29 ரன்களுக்கு விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மாறாக இங்கிலாந்து இதே மைதானத்தில் ஆடிய கடைசி 17 டெஸ்ட் போட்டிகளில் 12-ல் வென்று 2-ல் மட்டுமே தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: