லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் விராட் கோலிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் இடையே சிறு வார்த்தைப் பரிமாற்றம் நடந்தது. இதன் பிறகு கோலி எட்ஜ் ஆகி வெளியேறினார்.
ஆஸ்திரேலிய வீரர் போல் மைதானத்தில் வார்த்தை மோதலில் ஈடுபடும் பழக்கம் இந்திய வீரர்களுக்கு ஒரு காலத்தில் இருந்ததில்லை, சவுரவ் கங்குலி கேப்டனான பிறகு கொஞ்சம் மேட்டுக்குடிமைத் தனம் இந்திய கிரிக்கெட்டில் தலையெடுத்த பிறகு எதிரணியினர் சீண்டினால் பதிலடி கொடுக்கும் போக்கு வளர்ந்து வந்தது, இப்போது கோலியிடம் இது உச்சம் பெற்றுள்ளது.
ஆனால் ஆஸ்திரேலியர்கள் ஸ்லெட்ஜிங் செய்தாலும் தங்கள் ஆட்டத்தில் சோடைபோக மாட்டார்கள், ஆனால் கோலி பேட்டிங்கில் திணறி வருகிறார், அவர் பேட் முழுதுமே எட்ஜ் தானோ என்ற அளவுக்கு எட்ஜ் எடுக்கிறது. சதம் எடுத்து நீண்ட காலம் ஆகிறது, சதம் எடுக்க வேண்டாம் அணியில் கேட்பனாகவாவது பங்களிப்பு செய்ய வேண்டாமா, அதுவும் இல்லை.
இந்நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சனை இவர் ஸ்லெட்ஜிங் செய்கிறார், அவர் 39 வயதில் பேட்டிங் இறங்கிய போது பும்ராவை விட்டு அவருக்கு பவுன்சர்களை தொடர்ச்சியாக வீசச் சொல்லி அவரைக் காயப்படுத்தும் முயற்சியில் அநாகரிகமான உத்தியக் கடைப்பிடித்தார் விராட் கோலி. கோலி கேப்டனாக இருந்தால் இந்திய பவுலர்கள் வீரர்களின் நடத்தை தரம் தாழ்ந்து போகும் நிலையே ஏற்படும்.
இந்நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் கவனத்தை திசைத்திருப்புமாறு அவர் பிட்சில் அபாயகரமான பகுதியில் ஸ்பைக் ஷூவுடன் ஓடுகிறார் இது பிட்சை சேதம் செய்யும் முயற்சி என்று கோலி ஒரு குற்றச்சாட்டை முன் வைக்க அதற்கு ஆண்டர்சனும் தவறான வார்த்தையைப் பயன்படுத்தியதாக தெரிகிறது, அதற்குப் பதிலடியாக கோலி, “என்னை மீண்டும் திட்டுகிறீர்களா? இது உங்கள் வீட்டு கொல்லைப்புறம் அல்ல” என்றார். அதாவது பேக்யார்டு கிரிக்கெட் போல் பிட்சில் காலை பதிக்க முடியாது, இது டெஸ்ட் மேட்ச் உங்கள் வீட்டு கொல்லைப்புறம் போல் சேதம் செய்வதற்கான இடமல்ல என்ற அர்த்தத்தில் விராட் கோலி பதிலுரைத்தர்.
Kohli vs Anderson 2021. pic.twitter.com/awziOIK3vF
— vkohli (@vkohli_cric) August 15, 2021
ஆனால் அவர் சும்மா இருப்பாரா, ஜேம்ஸ் ஆண்டர்சனும் ஏதோ கூறப்போக, அதற்குக் கோலி, “எப்போதும் சிணுங்கல்தான், உங்கள் வயது இதைத்தான் உங்களுக்கு செய்துள்ளது” என்றார்.
5ம் நாள் ஆட்டம் இன்று விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா கிரீசில் இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England, James anderson, Test match, Virat Kohli