லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கேயும் மழை! இந்தியா பேட்டிங்- இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்கள்

லார்ட்ஸ்லயும் மழை

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது, அந்த அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 • Share this:
  லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது, அந்த அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  மொயின் அலி, மார்க் உட் பவுலிங்கில் வர, பேட்டிங்கில் இந்தியாவோடு பயிற்சி முதல் தர ஆட்டத்தில் சதம் எடுத்த ஹசீப் ஹமீத் அணியில் எடுக்கப்பட்டுள்ளார், இதனால் இங்கிலாந்து பேட்டிங் கொஞ்சம் வலுவாகியுள்ளது.

  இந்திய அணியில் காயமடைந்த ஷர்துல் தாக்கூருக்குப் பதில் இஷாந்த் சர்மா வந்துள்ளார், அஸ்வின் மீண்டும் இடம்பெறவில்லை. அவரை ஒதுக்குவது அநியாயமாக இருக்கிறது.

  Also Read: India vs England 2nd test| லார்ட்ஸ் டெஸ்ட் சவாலுக்கு இப்படித்தான் தயாரானது கோலி படை

  பிட்ச் கொஞ்சம் பசுமையாக உள்ளது, ஆனால் ஏற்கெனவே லேசான மழையினால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கவுள்ளது. வானிலை மேகமூட்டமாக இருப்பதால் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்வதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூற. முதலில் பேட் செய்து நல்ல ஸ்கோரை எடுக்க வாய்ப்பு என்கிறார் விராட் கோலி.

  Also Read: இந்திய அணியின் 11 வீரர்கள் யார்?


  ஆண்டர்சன் ஆட மாட்டார் என்றார்கள் ஆனால் அவர் உடல் தகுதி பெற்று ஆடுகிறார். பிராட் இல்லாதது இங்கிலாந்துக்கு மறைமுக ஆசீர்வாதம். மார்க் உட் 150 கிமீ வேகத்தில் வீசக்கூடியவர். பந்து எகிறும். இது இந்திய வீரர்களுக்கு எப்பவுமே கடினம்தான், மார்க் உட் பேட்டிங்கும் சுமாராக ஆடக்கூடியவர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அனைத்தையும் விட இந்தியாவுக்கு எதிராக நல்ல ரெக்கார்ட் வைத்திருக்கும் மொயின் அலி வந்திருப்பது, பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் இங்கிலாந்துக்கு வலு சேர்க்கிறது.
  Published by:Muthukumar
  First published: