கபில்தேவை விஞ்சிய மொகமட் சிராஜ்; இங்கிலாந்தில் 7 பேர் டக் அவுட்- லார்ட்ஸ் சுவாரசியங்கள்

கடைசி விக்கெட்டை வீழ்த்திய சிராஜ்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்று படு ஆக்ரோஷமாகப் பந்து வீசி 60 ஓவர்களுக்குள் இங்கிலாந்தை 120 ரன்களுக்குச் சுருட்டி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. இதில் முகமது சிராஜ் கபில்தேவுக்குப் பிறகு லார்ட்ஸ் டெஸ்ட்டில் அறிமுகத்திலேயே சாதித்துள்ளார்.

  • Share this:
    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்று படு ஆக்ரோஷமாகப் பந்து வீசி 60 ஓவர்களுக்குள் இங்கிலாந்தை 120 ரன்களுக்குச் சுருட்டி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. இதில் முகமது சிராஜ் கபில்தேவுக்குப் பிறகு லார்ட்ஸ் டெஸ்ட்டில் அறிமுகத்திலேயே சாதித்துள்ளார்.

    சிராஜ் இந்த டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

    லார்ட்ஸ் டெஸ்ட் புள்ளி விவரங்கள் இதோ:

    லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் 3வது வெற்றியாகும் இது, 1986-ல் கபில்தேவ் தலைமையில் முதல் வெற்றி பெற்றது, பிறகு தோனி தலைமையில் 2014-ல் இஷாந்த் சர்மாவின் பேய் பவுலிங்கில் இந்தியா வென்றது, ஆனால் இந்தத் தொடரில் தோனியின் மட்டமான கேப்டன்சியினால் தொடரை இந்தியா 3-1 என்று இழந்தது.

    கடைசி விக்கெட்டை காலி செய்த சிராஜ், கொண்டாட்டத்தில் இந்தியா


    5-ம்நாளில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்தியா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது. கொல்கத்தாவில் 2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த பேமஸ் வெற்றியின் போது தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்தியா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 8 விக்கெட்டுகளை 126 ரன்களுக்கு எடுத்தார், கபில்தேவ் 1982-ல் 168 ரன்களுகளுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜொகான்னஸ்பர்கில் 2018-ல் தென் ஆப்பிரிக்காவின் 20 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்தனர். ட்ரெண்ட் பிரிட்ஜிலும், அதாவது இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்திய வேகபந்து வீச்சாளார்கள் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இங்கிலாந்தின் பவுன்சர்களை ஊதித்தள்ளிய இந்திய வீரர்கள் ஷமி, பும்ரா


    ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் எடுத்த 180 ரன்கள் தோற்கும் அணிக்கான 6வது தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். ஒரு கேப்டனாக அதிக ஸ்கோர் எடுத்து அணி தோற்றதும் இதுவே.

    ரூட்டின் 22 சதங்களில் இந்த 180 ரன்கள் சதம்தான் தோல்வியில் முடிந்தது. ஆனால் அதிக சதங்கள் ஆனால் சதம் எடுத்து தோல்வி அடையாத கேப்டன்களில் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் சாதனை புரிந்துள்ளார் 27 சதங்கள் எடுத்து ஒரு சதம் கூட தோல்வியில் முடியவில்லை. வாலி ஹாமண்ட், ஜெஃப் பாய்காட், இயன் பெல் ஆகியோரும் 22 சதங்களில் அணி தோல்வி கண்டதில்லை.

    விக்கெட்டுகள் ஒரு முனையில் விழ ஜோ ரூட் இன்னொரு முனையில் அரைசதம் கண்டார்.


    இதே ஷமி, புவனேஷ்வர் குமாருடன் இணைந்து 2014-ல் இதே இங்கிலாந்துக்கு எதிராக கடைசி விக்கெட்டுக்காக 111 ரன்களைச் சேர்த்தார், நேற்று 9வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 89 ரன்கள் அதிக ரன் கூட்டணியாகும்.

    புவனேஷ்வர் குமார்.


    இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தில் 7 டக்குகள் அடிக்கப்பட்டன. இது இங்கிலாந்துக்கு அதிகம். 1999-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரகா 7 பேர் டக் அடித்தனர், இப்போது இந்தியாவுக்கு எதிராக 7 பேர் டக் அவுட்.

    சாம் கரன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகி ‘king pair' என்ற சாதனைக்குரியவரானார். லார்ட்ஸில் இதுவே முதல் முறை. 4 இங்கிலாந்து வீரர்கள் இதற்கு முன்பாக இரு இன்னிங்ஸ்களிலும் டக் அடித்துள்ளனர்.
    Published by:Muthukumar
    First published: