‘டான்சிங் ரோஸ்’ ஆன விராட் கோலி- லார்ட்ஸ் பால்கனியில் நடனம்

கோலி டான்ஸ்

லார்ட்ஸ் பால்கனியில் ஒருமுறை கங்குலி சட்டையைக் கழற்றி சுழற்றினார் என்றால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி லார்ட்ஸ் பால்கனியில் டான்சிங் ரோஸ் ஆனார்.

  • Share this:
லார்ட்ஸ் பால்கனியில் ஒருமுறை கங்குலி சட்டையைக் கழற்றி சுழற்றினார் என்றால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி லார்ட்ஸ் பால்கனியில் டான்சிங் ரோஸ் ஆனார்.

1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டைத் தூக்கி நிறுத்துமாறு லார்ட்ஸ் மைதானத்தில் உலகக்கோப்பையைத் தூக்கினார் கபில்தேவ், இன்று அணி சரியாக ஆடாமல் திணறி வரும்போதும், தன் பார்ம் சரியில்லாத நிலையிலும்  நாகின் டான்ஸ் ஆடுகிறார் கோலி!!

விராட் கோலி தன் பேட்டிங்கில் சமீபாக எடுத்த ரன்கள் 20, 42, 0, 13, 44, 0, 27, 62, 0, 20

ரசிகர்களைத் தூண்டி விடுவது, அவர்களை இந்திய அணிக்கு ஆதரவு தருமாறு செய்கைகளை மைதானத்தில் நிகழ்த்துவது போன்ற செயல்கள் கோலியிடம் அதிகமாகி வருகின்றன, குறிப்பாக ரகானே தலைமையில் ஆஸ்திரேலியாவில் இவர் இல்லாமல் தொடரை வென்று விட்டு வந்த பிறகு மைதான சேட்டைகள் கோலியிடம் அதிகமாகக் காணப்படுகின்றன. இது ஒரு கவன ஈர்ப்பு உத்திதான்.

சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கேரக்டருக்கு பேராதரவு இருக்கும், ஆனால் ரிங்கில் அவர் டான்ஸ் ஆடிக்கொண்டே பாக்சிங்கில் கபிலன் (ஆர்யா) இடம் தோற்றுப் போவார்.



கோலி இது போன்று தன் கவனத்தை சிதறவிடாமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவது நல்லது, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை எப்படி ஆடாமல் விடுவது, அவுட் ஸ்விங்கர், எது இன்ஸ்விங்கர் எது என்பதைக் கணிப்பதில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வது என்று கவனம் செலுத்தினால் அது இந்திய கிரிக்கெட்டுக்கும் அவருக்கும் நல்லது.

ஆனால் கோலியிடமோ கிரிக்கெட்டைத் தாண்டி மைதான சேட்டை, ஓய்வறை சேட்டைகள் அளவுக்கதிகமாகிவிட்டன. ஆனால் ரசிகர்கள் இதை விரும்புகின்றனர் என்பதால் இதிலும் தவறில்லை. ஆனால் அவரின் கையை விட்டுப் போகும் ஆட்டத்திறன் மீதும் அவர் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

இந்நிலையில் லார்ட்ஸ் பால்கனியில் வங்கதேச வீரர்கள் போல் ‘நாகின் டான்ஸ்’ ஆடினார் விராட் கோலி. இது சமூக ஊடகங்களில் வைராலாகி வருகிறது.



லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278/3 யிலிருந்து 364க்கு கொலாப்ஸ் ஆன இந்திய அணி, பிறகு ஜோ ரூட்டின் அபாரமான இன்னிங்ஸில் இங்கிலாந்துக்கு 27 ரன்கள் முன்னிலை அளித்தது. ஜேம்ஸ் ஆண்டர்சனை ஓல்ட் ஏஜ் என்று கிண்டல் செய்தார் விராட் கோலி ஆனால் ஓல்ட் ஏஜில் 5 விக்கெட்டுகளை அவரிடம் கொடுத்தது யார் தப்பு, அதுவும் வந்தவுடன் முதல் பந்திலேயே போன டெஸ்ட் போட்டியில் அவுட் ஆனது யார்? கோலிதானே. 2வது இன்னிங்ஸில் இந்தியா 181/6 என்று பரிதவித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் டான்சிங் ரோஸ் ஆன விராட் கோலியின் பால்கனி நாகின் டான்ஸ் பிரபலமாகி வருகிறது.
Published by:Muthukumar
First published: