Ind vs Eng | முதல் டெஸ்ட் போட்டி: 4 டக் அவுட்.. 183 ரன்களில் சுருட்டி இங்கிலாந்தை திணறடித்த இந்திய அணி!

இந்திய அணி

65.4 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து அணி 183 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரன் ரேட் 2.79 ஆக இருந்தது.

  • Share this:
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா - ஷமி வேக கூட்டணியின் முன் தாக்குப் பிடிக்க முடியாத இங்கிலாந்து அணி, 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நாட்டிங்ஹேம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆரம்பமே டக் அவுட்:

ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே ஷாக் கொடுத்தார். ரோரி பர்ன்ஸை ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் செய்தார் பும்ரா. இருப்பினும் நிதான ஆட்டத்தை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடைபிடித்தனர். பெரிய ஸ்கோர் எதுவும் எடுக்க விடாமல் பார்த்துக் கொண்டது இந்திய இளம் படை. இதன் காரணமாக ஜோ ரூட் தவிர்த்து யாருமே சொல்லிக்கொள்ளும் வகையிலான ஸ்கோரை எடுக்கவில்லை.

Also Read:  ஆப்கனில் இந்தியா கட்டிக் கொடுத்த ₹2000 கோடி மதிப்பிலான சல்மா அணை மீது தலிபான்கள் தாக்குதல் முயற்சி

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் தனது 50வது அரை சதத்தை எடுத்தார். பின்னர் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் 64 ரன்களுக்கு நடையை கட்டினார். ஜானி பேர்ஸ்டோ 29 ரன்களும், ஸாக் கிராலே மற்றும் சாம் கரண் தலா 27 ரன்கள் எடுத்தனர்.

4 டக் அவுட்..

ரோரி பர்ன்ஸ், டேன் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், ஒலி ராபின்சன் என 4 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் 65.4 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து அணி 183 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரன் ரேட் 2.79 ஆக இருந்தது.

இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்களையும், முகமது ஷமி 3 விக்கெட்களையும், ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்களையும் எடுத்தனர். முகமது சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி எக்ஸ்டிராஸ் வகையில் 13 ரன்களை விட்டுத் தந்திருக்காவிட்டால் இங்கிலாந்து அணியின் ரன் எண்ணிக்கை மோசமாக இருந்திருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் 17 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் ஆடி வருகிறார்கள்.

தொடர்ந்து சத்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரகானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா என பெரும் படையே இருப்பதால் இந்திய அணி பெரிய ஸ்கோரை குவித்து இங்கிலாந்து அணிக்கு சவால் விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Arun
First published: