India vs England| கோல்டன் டக் அடித்த கேப்டன் கோலி: நன்றாகத் தொடங்கி தடுமாறும் இந்தியா

கோலி அவுட் ஆன ஆண்டர்சன் பந்து.

நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நன்றாகத் தொடங்கி கடைசியில் 4 விக்கெட்டுகளை இழந்து 125 என்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் தடுமாறி வருகிறது. மழை காரணமாக முழு ஆட்டம் நடைபெறவில்லை. 

  • Share this:
    நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நன்றாகத் தொடங்கி கடைசியில் 4 விக்கெட்டுகளை இழந்து 125 என்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் தடுமாறி வருகிறது. மழை காரணமாக முழு ஆட்டம் நடைபெறவில்லை.

    ஆட்ட முடிவில் கே.எல். ராகுல் அபாரமான 57 ரன்களுடனும், ரிஷப் பந்த் 7 ரன்களுடனும் உள்ளனர். டெஸ்ட் அணியில் இடம்பெறுவாரா என்று சந்தேகமாக இருந்த ராகுல் கடைசியில் மயங்க் அகர்வால் மூளை அதிர்ச்சி காயத்தினால் அணியில் இடம்பெற்று பிரமாதமாக ஆடினார். ஆனால் அனுபவ புஜாரா, கோலி சொதப்பித் தள்ளினர்.

    21/0 என்று இந்தியா தொடங்கிய போது இங்கிலாந்து பெரும்பகுதி படுதண்டமாக பந்து வீசினர், ஸ்விங் இருந்ததே தவிர அச்சுறுத்தல் இல்லை, இந்திய பேட்ஸ்மென்களை பந்துகள் ஊடுருவவில்லை. வேகமும் இந்திய பவுலர்கள் அளவுக்கு இல்லை. 130-135 என்ற வேகத்தில்தான் இங்கிலாந்து பவுலர்கள் வீசினர். ரோகித் சர்மா, ராகுலை இவர்கள் பந்துகள் அச்சுறுத்தவில்லை. சாம் கரன் டெஸ்ட் தரத்துக்கான பவுலரா என்ற சந்தேகம் எழுகிறது.

    ராகுல்


    ரோகித்தும் ராகுலும் பந்துகளை லேட்டாகச் சந்தித்தனர், காரணம் இங்கிலாந்து பவுலர்களிடம் இந்திய தொடக்க வீரர்களை அவசரப்படுத்தும் வேகம் சுத்தமாக இல்லை. இதனால் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 97/1 என்று நல்ல நிலையில் இருந்தது. ரோகித் சர்மா ட்ரபிள் இல்லாமல் ஆடி வந்தார், ஆனால் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் என்று கடின உழைப்பைப் போட்டு விட்டு கடைசியில் ஆலி ராபின்சனின் ஷார்ட் பிட்ச் பந்தை ஹூக் செய்து நேராக பைன்லெக்கில் ஒரே பீல்டர் சாம் கரன் கையில் அடித்து வெளியேறினார்.

    உணவு இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து உண்மயில் லெந்த்தைக் கண்டுப்பிடித்தது. ஸ்டம்பை நோக்கி அதிகபந்துகள் வந்தன. புஜாரா தடவினார், ஒரு வலுவான எல்.பி. முறையீட்டில் ரிவியூவில் தப்பினார். ஆண்டர்சன் வந்தார் ஒரு இன்ஸ்விங்கரை புஜாராவுக்கு ஸ்டம்பில் வீசினார். புஜாரா தடுத்தார் ஆனால் பந்து லேசாக வெளியே எடுக்க எட்ஜ் ஆகி பட்லர் கையில் உட்கார்ந்தது.

    இப்போது பத்திரிகைகளும் ஊடகங்களும் ஊதிப்பெருக்கும் ஆண்டர்சன் - கோலி மோதல் தொடங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. கோலி நவம்பர் 2019-க்குப் பிறகு சர்வதேச சதம் ஒன்றையும் எடுக்கவில்லை. கோலி இந்த முறை புஜாராவுக்கு வந்தது போல் இன்ஸ்விங்கர் ஆகும் என்று எதிர்பார்த்து முன்காலை நீட்டி மட்டையைக் கொண்டு சென்றார், இன்ஸ்விங்கர் போல்தான் வந்தது ஆனால் வெளியே ஸ்விங் ஆனது, ஆடாமல் விட்டிருக்கலாம் ஆனால் அது இன்ஸ்விங்கர் என்ற பயத்திலேயே மட்டையைக் கொண்டு செல்ல எட்ஜ் ஆகி பட்லர் கையில் போய் உட்கார்ந்தது.

    கோல்டன் டக் அடித்தார் கோலி. 97/0 என்ற நிலையிலிருந்து 104/3 என்று ஆனது இந்தியா, அதன் பிறகு 5 ரன்கள் எடுத்த ரகானே தேவையில்லாமல் வேகமாக ஒரு ரன்னுக்காக ஓடி ராகுல் திருப்பி அனுப்ப திரும்பி வரும்போது ரன்னர் முனையில் பேர்ஸ்டோவின் த்ரோ ஸ்டம்பில் அடிக்க ரன் அவுட் ஆனார். நன்றாகத் தொடங்கிய இந்திய அணி இப்போது 58 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில் 125/4 என்று இன்று 3ம் நாளை தொடங்குகிறது.
    Published by:Muthukumar
    First published: