India vs England | ரோஹித், சுப்மன் அவுட்... இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் ஆர்ச்சர்

India vs England | ரோஹித், சுப்மன் அவுட்... இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் ஆர்ச்சர்

ஜோப்ரா ஆர்ச்சர்

Inida vs England | 190 ஓவர்கள் ஃப்ல்டிங் செய்து களைத்திருந்த இந்திய வீரர்கள் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய தொடங்கினர்.

  • Share this:
சென்னை டெஸ்டில் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள இந்திய அணி ரோஹித் சர்மா, சுப்மன் கில் விக்கெட்டை இழந்து தடுமாறுகிறது.

இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சென்னை டெஸ்டில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் 2 நாட்களுக்கு மேலாக தடுமாறினார்கள். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். சென்னை டெஸ்டில் 3-வது நாளான இன்று இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய தரப்பில் அஸ்வின் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

190 ஓவர்கள் ஃப்ல்டிங் செய்து களைத்திருந்த இந்திய வீரர்கள் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய தொடங்கினர். தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 6 ரன்னிலும், சுப்மன் கில் 29 ரன்னிலும் ஆர்ச்சர் பந்துவீச்சில் சிக்கி அவுட்டாகினர். இந்திய அணி 44 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கும் புஜாரா மற்றும் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்து வருகின்றனர்.
Published by:Vijay R
First published: