CRICKET INDIA VS ENGLAND JOE ROOT AND CO BREAK 66 YEAR OLD RECORD BY FINEST OF MARGINS MUT
66 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையை முறியடித்த ஜோ ரூட் தலைமை இங்கிலாந்து
ஜோ ரூட்
1955-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் லாகூரில் 328 ரன்களை பாகிஸ்தான் எடுத்த போது இந்திய அணி ஒரு எக்ஸ்ட்ராஸ் கூட கொடுக்கவில்லை, அந்தச் சாதனையை தற்போது இங்கிலாந்து அணி 1 ரன்னில் முறியடித்தது.
சென்னையில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி செய்த ஒரு சாதனையை ஜோ ரூட் தலைமை இங்கிலாந்து நேற்று முறியடித்தது.
முதல் இன்னிங்ஸில் நேற்று இந்தியா 300/6 என்று தொடங்கி 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, புலியாகச் சீறிய ரிஷப் பந்த் வெளுத்துக் கட்டினார், சிக்சர்கள் பவுண்டரிகள் என்று அடித்து நொறுக்கினார், ஆனால் எதிர்முனையில் அவருக்கு உறுதுணையாக ஆட ஆளில்லை. யாராவது இன்னும் 5 ஓவர்கள் நின்றிருந்தால் அவர் மேலும் 30-40 ரன்களை விளாசியிருப்பார்.
இந்நிலையில் 329 ரன்களில் இங்கிலாந்து அணி உதிரிகளாக ஒரு ரன்னைக் கூட கொடுக்கவில்லை, எக்ஸ்ட்ராஸ் ஒரு ரன் கூட இல்லை என்பது ஒரு புதிய சாதனையாக இங்கிலாந்துக்கு அமைந்தது.
1955-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் லாகூரில் 328 ரன்களை பாகிஸ்தான் எடுத்த போது இந்திய அணி ஒரு எக்ஸ்ட்ராஸ் கூட கொடுக்கவில்லை, அந்தச் சாதனையை தற்போது இங்கிலாந்து அணி 1 ரன்னில் முறியடித்தது.
ரவிச்சந்திரன் அஸ்வின் பிறகு தனது 29வது டெஸ்ட் 5 விக்கெட்டுகளை எடுக்க இங்கிலாந்து அணி 134 ரன்களுக்குச் சுருண்டு பாலோ ஆனை போராடித் தவிர்த்தது. அஸ்வின் இதோடு 200 இடது கை வீரர்களையும் வீழ்த்தி வித்தியாசமான இரட்டைச்சத சாதனையையும் நிகழ்த்தினார்.
மும்பையில் 1981-ல் கபில், மதன்லால் பவுலிங்கில் 2வது இன்னிங்ஸில் 102 ரன்களுக்கு சுருண்ட பிறகு இந்தியாவில் இரண்டாவது குறைந்த ஸ்கோரை நேற்று ஜோ ரூட் தலைமை இங்கிலாந்து எடுத்தது.
ஜோ ரூட் 6 ரன்களில் அக்சர் படேல் பவுலிங்கில் ஆட்டமிழந்து அக்சர் படேலுக்கு டெஸ்ட் முதல் விக்கெட்டை பரிசாக அளித்தார். தெரியாத்தனமாக ஒரு ஸ்வீப் ஷாட் மாட்ட மீண்டும் அதே ஷாட்டை முயன்ற போது டாப் எட்ஜ் ஆனது.
முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த இங்கிலாந்து இப்போது குழிப்பிட்சில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.
இந்தியா 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, ரோஹித் சர்மா, புஜாரா இன்று களமிறங்கவுள்ளனர்.