• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கபில் தேவின் இந்த சாதனையை பும்ரா உடைப்பார்- 3வது டெஸ்ட் சுவாரசியம்

கபில் தேவின் இந்த சாதனையை பும்ரா உடைப்பார்- 3வது டெஸ்ட் சுவாரசியம்

ஆண்டர்சன் - பும்ரா

ஆண்டர்சன் - பும்ரா

பும்ரா மிகப்பிரமாதமாக இந்தியாவுக்காக கடந்த சில ஆண்டுகளாக வீசி வருகிறார், அன்று லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனையும் இங்கிலாந்தையும் மனரீதியாக ஒருமைக்குலைவை ஏற்படுத்தி இந்தியா 151 ரன்களில் வெற்றி பெற்றது.

  • Share this:
    பும்ரா மிகப்பிரமாதமாக இந்தியாவுக்காக கடந்த சில ஆண்டுகளாக வீசி வருகிறார், அன்று லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனையும் இங்கிலாந்தையும் மனரீதியாக ஒருமைக்குலைவை ஏற்படுத்தி இந்தியா 151 ரன்களில் வெற்றி பெற்றது.

    முதலில் ஷமியுடன் சேர்ந்து 20 ஓவர்கள் நின்று 89 ரன்கள் கூட்டணி அமைத்தார், பிறகு வந்து பேய் போல் பந்து வீசி பர்ன்ஸ், ஜோ ரூட் உட்பட 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    கபில்தேவ்


    இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் 95 விக்கெட்டுகளை பும்ரா எடுத்துள்ளார். அதாவது 100 விக்கெட்டுகளை இவர் 3வது ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் கைப்பற்றினால் கபில்தேவ் சாதனையை முறியடிப்பார், கபில்தேவ் 100 விக்கெட்டுகள் மைல்கல்லை 25 டெஸ்ட் போட்டிகளில் எடுத்தார்.

    மேலும் மனோஜ் பிரபாகரின் 96 டெஸ்ட் விக்கெட்டுகள், வெங்கடேஷ் பிரசாத்தின் 95 டெஸ்ட் விக்கெட்டுகளையும் பும்ரா எளிதில் முறியடிப்பார்.

    பும்ரா இந்திய அணிக்கு நுழைந்தது முதல் அயல்நாடுகளில் இந்திய அணி எதிரணியினரின் 20 விக்கெட்டுகளையும் அதிக முறை கைப்பற்றியுள்ளது. இவரது ஆக்‌ஷம் புரிந்துக் கொள்ள கடினமானது.

    முதல் இன்னிங்சில் விக்கெட் இல்லாத பும்ரா 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது ஜோ ரூட் விக்கெட்


    அன்று ஆண்டர்சனுக்கு பவுன்சர்களாக வீசி அவரது ஈகோவைத் தூண்டிவிட்டு காயப்படுத்த மீண்டும் வந்து அவர்கள் பவுன்சர்களாக வீசி கவனத்தைச் சிதறவிட்டனர், கடைசியில் ஷமி அரைசதம் எடுக்க பும்ரா 34 நாட் அவுட் என்று முடிக்க இங்கிலாந்து அணி கோமாளியாகி விட்டது.

    ஆண்டர்சனிடம் மன்னிப்புக் கேட்ட போது பும்ராவை அவர் அலட்சியப்படுத்தினார், இது விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களை உசுப்பேற்றி விட்டு பேய்த்தனமாக பவுலிங் வீசினர்.

    குறிப்பாக விராட் கோலி அசிங்கம் அசிங்கமான வார்த்தைகளுடன் இங்கிலாந்தை வசைபாடி வெறுப்பேற்றினார், மேலும் அந்த 60 ஓவர்கள் இங்கிலாந்துக்கு நரகமாக இருக்க வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு உசுப்பேற்றினார். கடைசியில் இன்று இந்தியா 1-0 முன்னிலை பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியாவின் வெற்றி இங்கிலாந்தை உளவியல் ரீதியாக கொடுத்த அடியிலிருந்து பெற்ற வெற்றியே, இங்கிலாந்து இதிலிருந்து மீள்வது கடினம் என்று சுனில் கவாஸ்கரும் தெரிவித்துள்ளார்.

    25ம் தேதி ஹெடிங்லேயில் அடுத்த டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: