• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Oval test India win| ஷர்துல் தாக்கூர் விட்டதை பும்ரா பிடித்தார்

Oval test India win| ஷர்துல் தாக்கூர் விட்டதை பும்ரா பிடித்தார்

ஆண்டர்சன் - பும்ரா லார்ட்ஸ் டெஸ்ட்

ஆண்டர்சன் - பும்ரா லார்ட்ஸ் டெஸ்ட்

ஓவல் டெஸ்ட்டில் அபாரமான ஒரு பந்து வீச்சில் இங்கிலாந்தை நசுக்கி வெற்றிக்கு வித்திட்ட பும்ரா குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 100 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி கபில்தேவ் சாதனையை முறியடித்தார்.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    100 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை கபில்தேவ் 25வது டெஸ்ட் போட்டியில் எட்ட, ஜஸ்பிரித் பும்ரா நேற்று 24வது டெஸ்ட் போட்டியிலேயே இதனைச் சாதித்தார். கபில்தேவுக்குப் பிறகு எத்தனையோ சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை இந்தியா உற்பத்தி செய்தது, அதில் ஜவகல் ஸ்ரீநாத், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, இர்பான் பதான், ஸ்ரீசாந்த், முனாப் படேல், ஷமி என்று யாரும் கபில்தேவ் சாதனையை முறியடிக்க முடியவில்லை, ஆனால் பும்ரா முறியடித்துள்ளார்.

    இங்கிலாந்தின் ஆலி பாப் விக்கெட்டை இன்ஸ்விங்கிங் யார்க்கர் லெந்த் பந்தில் பும்ரா வீழ்த்தி தன் 100வது விக்கெட்டை கைப்பற்றினார், இதைக் கொண்டாடும் விதமாக ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டையும் யார்க்கரில் காலி செய்து 101வது விக்கெட்டைக் கைப்பற்றினார். பும்ரா நேற்று 22 ஓவர் 9 மெய்டன், 27 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தினார். ஜடேஜா 30 ஓவர் 11 மெய்டன் 50 ரன் 2 விக்கெட். ஷர்துல் தாக்கூர் 8-1-22-1, உமேஷ் யாதவ் 18.2-2-60-3. சிராஜ் பாவம் விக்கெட் வீழ்த்தவில்லை.

    ஷர்துல் தாக்கூர் முதல் இன்னிங்சில் 31 பந்துகளில் அதிவேக அரைசதம் எடுத்து கபில்தேவின் அதிவேக டெஸ்ட் அரைசதத்தை ஒரு பந்தில் தவறவிட்டார், ஆனால் பும்ரா ஒரு டெஸ்ட் குறைவாக 100 டெஸ்ட் விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டி ஷர்துல் தவற விட்ட பேட்டிங் சாதனையை ஈடுகட்டுமாறு பவுலிங்கில் கபில்தேவ் சாதனையை முறியடித்தார்.

    கபில்தேவ்


    Also Read: Ind vs Eng Oval win| என் கிட்ட பந்தைக் கொடுங்க என்றார் பும்ரா: கிரேட் வின் பற்றி விராட் கோலி பெருமிதம்




    ஷர்துல் தாக்கூர்


    இர்பான் பதான் 28 டெஸ்ட்களில் 100 விக்கெட்டுகளையும் ஷமி 29 டெஸ்ட்களில் 100 விக்கெட்டுகளையும், ஸ்ரீநாத் 30 டெஸ்ட்களில் 100 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 33 டெஸ்ட்களில் 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: