India vs England| 90 மைல் வேகம், வாழ்நாளில் சந்தித்ததில்லை: பும்ரா குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆண்டர்சன் - பும்ரா லார்ட்ஸ் டெஸ்ட்

லார்ட்ஸ் டெஸ்ட்டில் திருப்பு முனை ஏற்படுத்திய 3ம் நாள் மாலை பவுலிங்கில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பவுன்சர் மழை பொழிந்து அவர் ஈகோவை டச் செய்தார் ஜஸ்பிரித் பும்ரா.

  • Share this:
    லார்ட்ஸ் டெஸ்ட்டில் திருப்பு முனை ஏற்படுத்திய 3ம் நாள் மாலை பவுலிங்கில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பவுன்சர் மழை பொழிந்து அவர் ஈகோவை டச் செய்தார் ஜஸ்பிரித் பும்ரா.

    இது ஆண்டர்சனையும் இங்கிலாந்தையும் தட்டி எழுப்ப அவர்கள் பதிலுக்கு பவுன்சர்களாக வீசி பல்பு வாங்கியது வேறு கதை, ஆனால் தான் இப்படி ஒரு பவுலிங்கை வேகத்தை தன் வாழ்நாளில் சந்திக்கவில்லை என்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    தன் முகத்தருகே பந்து விர் விர் என்று இங்கும் அங்கும் பறந்து சென்றதை மிரட்சியுடன் எதிர்கொண்டார் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஆனால் தன்னை அவுட் ஆக்க முயற்சி செய்யவில்லை, காயப்படுத்தி உட்கார வைக்கவே பும்ரா முயற்சி செய்தார் என்கிறார் ஆண்டர்சன்.

    கடைசியில் பவுல்டு ஆனார், பெவிலியன் செல்லும் போது பும்ரா அவரது தோள்களில் தட்டி மன்னிப்புக் கேட்டார், ஆனால் ஆண்டர்சன் தன் வெள்ளைத்திமிரைக் காட்டி பும்ராவை அலட்சியப்படுத்தினார். ஏற்கெனவே 2014-ல் ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரம் வேறு கோலியின் மனதில் ஆழமாக பதிந்திருக்க, பழித்தீர்க்க காத்திருந்த கோலிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பானது.

    தீர்த்துக் கொண்டார், கோலியின் வலையில் இங்கிலாந்து வீழ்ந்தது. டெஸ்ட்டைத் தோற்றது. சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியது போல் தனக்காக ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியையே வழிமாற்றி திசைத்திருப்பி கவனம் சிதறக் காரணமாக இருந்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.கடைசியில் மரண உதை வாங்கியதுதான் மிச்சம்.

    இந்நிலையில் அந்த ஓவர் பற்றி ஆண்டர்சன் கூறியதாவது:

    எனக்கு முன்னால் பேட் செய்த அனைவரும் பிட்ச் ஸ்லோவாக இருப்பதாகக் கூறியதால் நான் கொஞ்சம் கவனமில்லாமல் இருந்து விட்டேன். அதுவும் ஷார்ட் பிட்ச் போட்டால் இன்னும் மெதுவாகவே வரும்.

    நான் பேட் செய்ய வரும்போது ஜோ ரூட் சொன்னா, பும்ரா நார்மலாகப் போடும் வேகத்தில் போடவில்லை என்றார். ஆனால் முதல் பந்தே பும்ரா வீசியது 90 மைல்கள் வேகம், இலக்கு நோக்கி வந்தது. அதாவது நான் இதுவரை என் வாழ்நாளில் சந்தித்திராத ஒன்று என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

    அவர் என்னை அவுட் ஆக்க முயற்சி செய்யவில்லை என்பதாகவே உணர்ந்தேன்.

    இவ்வாறு கூறினார் ஆண்டர்சன், அதாவது பும்ரா தன்னைக் காய்ப்படுத்தவே அப்படி வீசினார் என்கிறார் ஆண்டர்சன் சூசகமாக.
    Published by:Muthukumar
    First published: