• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஆண்டர்சன், ராபின்சன் பந்துகள் பேசுகின்றன: ஷேன் வார்ன் ஆச்சரியம்

ஆண்டர்சன், ராபின்சன் பந்துகள் பேசுகின்றன: ஷேன் வார்ன் ஆச்சரியம்

shane warne

shane warne

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஆட்டிப்படைக்கும் ஆண்டர்சன், ஆலி ராபின்சன் பந்துகள் பேசுகின்றன என்று ஷேன் வார்ன் அவர்களது பந்து வீச்சை பெரிதும் பாராட்டிப் பேசியுள்ளார்.

  • Share this:
    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஆட்டிப்படைக்கும் ஆண்டர்சன், ஆலி ராபின்சன் பந்துகள் பேசுகின்றன என்று ஷேன் வார்ன் அவர்களது பந்து வீச்சை பெரிதும் பாராட்டிப் பேசியுள்ளார்.

    3 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு அற்புதம். இந்திய வீரர்களைக் குறிப்பாக மும்மூர்த்திகள் புஜாரா, கோலி, ரகானேவை எழும்பவிடாமல் காலி செய்தனர். ரிஷப் பந்த்திற்கு ஒன்றும் புரியவில்லை, ஆக்ரோஷமாக ஆடுவதா, இல்லை தடுத்தாடி விட்டு தளர்வான பந்துகளை ஆடுவதா என்பது அவருக்குப் புரியவில்லை, அவரது குழப்பத்தை கோலி, ரவிசாஸ்திரி, பேட்டிங் கோச் யாரும் தீர்த்தும் வைக்க முடியவில்லை.

    ஆலி ராபின்சன்


    இந்நிலையில் இங்கிலாந்து அணியில் சில மாற்றங்களைச் செய்தால் இன்னும் வலுவாகும் என்று ஷேன் வார்ன் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    ஜடேஜாவை எப்படி மஞ்சுரேக்கர் பிட்ஸ் அண்ட் பீசஸ் கிரிக்கெட் வீரர் என்று சொன்னாரோ அதே போல் ஷேன் வார்ன், இங்கிலாந்தின் சாம் கரனை துண்டு துணுக்கு வீரர் என்று கூறியுள்ளார்.

    “சாம் கரனுக்குப் பதிலாக இன்னும் கூடுதல் திறமைகள் கொண்ட மார்க் உட் அல்லது ஸ்பின்னர்கள் ஜாக் லீச் அல்லது மாட் பார்கின்சன் ஆகியோரைக் கொண்டு வரலாம். மலான் 3ம் நிலையில் இறங்கிய பிறகே இங்கிலாந்து அணி வலுவாகியுள்ளது. ஆனால் தொடக்கத்தில் ஜாக் கிராலி இறங்க வேண்டும். அவர் ஒரு திறமையான வீரர்.

    ஆண்டர்சன் - கோலி.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பவுலிங் அபாரமாக இருக்கிறது, ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஆலி ராபின்சனும் ஓவர் பிட்ச், ஆஃப் வாலி பந்துகளை வீசினாலும் அடுத்தடுத்த பந்துகளை சிரமமாக வீசுகின்றனர். இருவரும் கொத்தாக இந்திய அணியை வேட்டையாடுகின்றனர். இவர்கள் பந்துகள் பேசுகின்றன, பெரிய பெரிய டெக்னிக்குகளுக்கெல்லாம் சவாலாக அமைந்துள்ளது” என்றார் ஷேன் வார்ன்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2ம் தேதி தொடங்குகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: