• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • India vs England| விராட் கோலி படை கொடுத்தது மரண அடி; இங்கிலாந்து எழும்புவது கடினம்: சுனில் கவாஸ்கர்

India vs England| விராட் கோலி படை கொடுத்தது மரண அடி; இங்கிலாந்து எழும்புவது கடினம்: சுனில் கவாஸ்கர்

கவாஸ்கர்- கோலி

கவாஸ்கர்- கோலி

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமை இந்திய அணி இங்கிலாந்துக்கு கொடுத்தது உளவியல் ரீதியான மரண அடி இதிலிருந்து இங்கிலாந்து மீண்டெழுவது கடினம் என்கிறார் சுனில் கவாஸ்கர்.

  • Share this:
    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமை இந்திய அணி இங்கிலாந்துக்கு கொடுத்தது உளவியல் ரீதியான மரண அடி இதிலிருந்து இங்கிலாந்து மீண்டெழுவது கடினம் என்கிறார் சுனில் கவாஸ்கர்.

    லார்ட்ஸ் டெஸ்ட் 3ம் நாள் ஆட்டத்தின் கடைசியில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பவுன்சர்களாக வீசி அவரது ஈகோவை சோதித்தார் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் பிரயோகிக்கும் ஒரு வார்த்தை என்னவெனில் ‘mental disintegration' அதாவது மனரீதியாக ஒரு அணியை குலைத்து விட்டால் எழுவது கடினம்.



    அப்படித்தான் அன்று இங்கிலாந்து தூண்டப்பட்டு கவனம் சிதறி ஷார்ட் பிட்ச் பவுன்சர்களாக வீசி ஷமி, பும்ராவிடம் கோமாளிகளாகி 151 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றனர்.

    இதிலிருந்து மீள்வது கடினம்.

    இதையும் படிங்க: ஆப்கானில் கிரிக்கெட்டுக்கு புத்துயிர்: புதிய சேர்மனை நியமித்த தாலிபான்கள்

    டெலிகிராப் இந்தியா ஊடகத்தில் கவாஸ்கர் எழுதிய பத்தியில் இது தொடர்பாகக் கூறியதாவது:

    இந்தியா இங்கிலாந்துக்கு மனோவியல் ரீதியாக பெரிய அடியைக் கொடுத்துள்ளது, இதிலிருந்து மீண்டு எழ வேண்டுமெனில் இங்கிலாந்துக்கு அதிமனித முயற்சி தேவை. ஆனால் கிரிக்கெட் ஆட்டம் நிச்சயமின்மைகளி அதிசயம் ஆகும் எனவே விஷயங்கள் விரைவில் தலைகீழாக மாறலாம். ஆனால் அது நடக்க வேண்டுமெனில் அந்த அணியில் பேரதிசியம் நிகழ்ந்தால்தான் உண்டு.

    முதல் இன்னிங்சில் விக்கெட் இல்லாத பும்ரா 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது ஜோ ரூட் விக்கெட்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    5ம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து வெற்றி பெறும் என்பதுதான் பெரும்பாலானோரின் எண்ணமாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து சீப் ஆக 120 ரன்களுக்குச் சுருண்டது. இங்கிலாந்து பேட்டிங் ஜோ ரூட்டை நம்பியே சுழல்கிறது, அவர் நின்று ஒருங்கிணைக்கவில்லையெனில் இங்கிலாந்து சிதறுகிறது.

    என்று கூறியுள்ளார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹெடிங்லியில் நாளை மறுநாள் தொடங்குகிறது, 1979க்குப் பிறகு இந்த மைதானத்தில் இந்திய அணி தோற்றதில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: