இங்கிலாந்துக்கு 3-0 தோல்வி: அந்த ஸ்பின்னர்களை வைத்துக் கொண்டு அவர்களால் வெல்ல முடியாது- கம்பீர்

இங்கிலாந்துக்கு 3-0 தோல்வி: அந்த ஸ்பின்னர்களை வைத்துக் கொண்டு அவர்களால் வெல்ல முடியாது- கம்பீர்

கம்பீர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற வேண்டும் என்பதால் இந்தத் தொடர் எப்படி முக்கியமானது என்பதை விராட் கோலி அறிவார்.

  • Share this:
ஒவ்வொரு முறை எந்த அணியும் ஆஸ்திரேலியா செல்லும் போது அங்குள்ள முன்னாள் வீரர்கள், நடப்பு வீரர்கள் எதிரணியை முற்றொழிப்பு செய்து விடுவோம், ஒயிட்வாஷ் என்றெல்லாம் பேசி அதை மைண்ட் கேம் என்பார்கள். அதே பாணியில் கவுதம் கம்பீர், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி 3-0 என்று வெல்லும், அல்லது 3-1 என்று வெல்லும் என்று கூறியுள்ளார்..

கம்பீர் திருவாய் மலர்ந்தருளியது எங்கு ஆஸ்திரேலியாவுக்கு சவுக்கடி விழுந்தது போல் இந்திய அணிக்கும் இங்கிலாந்தினால் விழுந்து விடுமோ என்று ரசிகர்கள் கம்பீர் கணிப்பை லேசான பயத்துடன் எதிர்கொண்டுள்ளனர்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு கம்பீர் கூறியதாவது:

3-0 அல்லது 3-1 என்று இந்தியா வெற்றி பெறும். பிங்க் நிறப்பந்தில் நடைபெறும் ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு வெற்றி பெற 50-50 சான்ஸ் உள்ளது. அதுவும் பிட்ச், நிலைமைகளை வைத்துக் கூறுகிறேன்.

இங்கிலாந்து அணி அதன் ஸ்பின்னர்களை வைத்துக் கொண்டு எந்த டெஸ்ட் போட்டியையும் வெல்ல முடியாது. நான் எப்போதும் கூறுவதென்னவெனில் சதங்கள் எடுப்பது முக்கியமல்ல, அது அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதே.

விராட் கோலி ஆஸ்திரேலியாவில் பேட் செய்யவில்லை என்பது ஒரு பொருட்டல்ல. அது அவருக்கு பிடிக்கவே செய்யும். ஆனால் இந்த இங்கிலாந்து தொடரை அவர் கவனமாக கையாள வேண்டும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற வேண்டும் என்பதால் இந்தத் தொடர் எப்படி முக்கியமானது என்பதை விராட் கோலி அறிவார்.

ஜோ ரூட்டுக்கு இந்த தொடர் முற்றிலும் வேறு ஒரு சவால். இலங்கையில் அவர் நன்றாக ஆடியிருக்கலாம் ஆனால் இங்கு வந்து பும்ரா, அஸ்வினை ஆடுவதெல்லாம் சுலபமல்ல, அதுவும் ஆஸ்திரேலியாவில் இவர்கள் சாதித்து விட்டு வந்துள்ளனர்.

எனவே இது முற்றிலும் வேறு ஒரு ஆட்டம், பந்துக்கும் மட்டைக்குமான வேறு ஒரு தளத்தில் நடக்கும் தொடராகும்.

இவ்வாறு கூறினார் கவுதம் கம்பீர். பொதுவாக இப்படிக் கூறும் போது அதற்கு மாறாக நடபெறுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் 5ம் தேதி தொடங்குகிறது.
Published by:Muthukumar
First published: