இங்கிலாந்து தொடருக்கு சென்றுள்ள இந்திய அணி வீரர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
கொரோனா உறுதி செய்யப்பட்ட இந்த வீரர் இங்கிலாந்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் தனிமை முடிந்து துர்ஹாமில் இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வீரரைத் தவிர மற்ற வீரர்கள் துர்ஹாமில் பயோ-பபுளுக்குத் திரும்பினர்.
இந்திய வீரருக்கு தொண்டைக் கட்டு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோவிட் டெஸ்ட் எடுக்க அதில் பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் இருந்த மற்ற வீரர்கள் உதவி பணியாளர்கள் ஆகியோரும் 3 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்போது தனிமைக் காலம் இவர்களுக்கு முடிந்து விட்டது.
இந்நிலையில் புதனன்று அணித் தேர்வுக்குழுவின் தலைவர் சேத்தன் சர்மா பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை கொல்கத்தாவில் சந்தித்தார். சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பதை இருவரும் வெளியிடவில்லை.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட அந்த அணி நிர்வாகிகளையும் சேர்த்து கொரோனா பாசிட்டிவ் ஆக புதிய இங்கிலாந்து அணியை தேர்வு செய்து பாகிஸ்தானுக்கு எதிராகக் களமிறக்கி தொடரை 3-0 என்று இங்கிலாந்து கைப்பற்றியும் விட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
டெல்டா வேரியண்ட் வைரஸ் 111 நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது, இங்கிலாந்திலும் பரவி வருகிறது இன்னும் குறைந்தபாடில்லை.
சமீபத்தில் இங்கிலாந்து சென்று திரும்பிய இலங்கை அணியில் வைரஸ் உள்ளே நுழைந்திருப்பது தெரியவர இந்தியா-இலங்கை தொடர் ஜூலை 13ம் தேதியிலிருந்து ஜூலை 18-க்குத் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கை பேட்டிங் கோச் கிராண்ட் பிளவர் டேட்டா அனலிஸ்ட் ஜி.டி. நிரோஷன் ஆகியோருக்கு பாசிட்டிவ் ஆனது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.