• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கோலியை அடக்க வேண்டிய தேவை உள்ளது: ஜேம்ஸ் ஆண்டர்சன்

கோலியை அடக்க வேண்டிய தேவை உள்ளது: ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆண்டர்சன் - கோலி.

ஆண்டர்சன் - கோலி.

லார்ட்ஸ் தோல்விக்குப் பிறகு சத்தம் ஓவராக இருந்தது அதைக் கொஞ்சம் அடக்க வேண்டியிருந்தது, ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருந்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

  • Share this:
    லார்ட்ஸ் தோல்விக்குப் பிறகு சத்தம் ஓவராக இருந்தது அதைக் கொஞ்சம் அடக்க வேண்டியிருந்தது, ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருந்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

    நேற்று ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களான ராகுல், புஜாரா, கோலியை மீண்டும் பெவிலியனுக்கு அனுப்பியதில் இந்திய அணி 78 ரன்களுக்குச் சுருண்டது. கோலியை 7வது முறையாக ஆண்டர்சன் வீழ்த்தினார். இங்கிலாந்து 120/0 என்று அபாரத் தொடக்கம் கண்டது.

    பேட்டிங் பிட்சில் இந்தியா 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பை சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

    Also Read: 78 ரன்களில் இந்தியா ஆல் அவுட்: வலுவான நிலையில் இங்கிலாந்து

    இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறும்போது, “கவனம் செலுத்துவதில் திட்டவட்டமாக இருந்தோம். மற்ற புற சப்தங்களை புறமொதுக்க வேண்டிய தேவை உள்ளது. நாங்கள் எதில் சிறந்தவர்களோ அதில் கவனம் செலுத்த முடிவெடுத்தோம்.

    Also Read: Virat Kohli| கோலியை வீழ்த்தி பழிதீர்த்த ஆண்டர்சன்: இது உன் 'பேக்யார்டா’ என்ற கேட்ட கோலிக்கு பதிலடி



    ஆம் ஓய்வறையில் இது குறித்து விவாதித்தோம். லார்ட்ஸ் டெஸ்ட்டில் முதல் 3-4 நாட்கள் நாங்கள் பிரில்லியண்ட் ஆக ஆடினோம். வாக்குவாதங்களில் ஈடுபடவில்லை. 3ம் நாளுக்குப் பிறகுதான் எல்லாம் மாறிப்போனது, அது கொஞ்சம் அணியை பாதித்தது.

    பேட்டிங்கில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் பிரமாதமாக ஆடினர். இதைத்தான் நாங்களும் ஓய்வறையில் வலியுறுத்தினோம்.

    ஆம் கோலியை வீழ்த்தியது சிறப்பு வாய்ந்த தருணம்தான். சில ஆண்டுகளாக இருவரும் சிறந்த முறையில் ஒருவரையொருவர் எதிர்கொண்டிருக்கிறோம். அவர் ஒரு அருமையான வீரர் ஒரு அணியாக அவரை கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டியிருந்தது. குறிப்பாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் ஆடத் தொடங்கினால் அது பெரிய இடையூறாக அமைந்து விடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர் முழுதும் அவருக்கு பந்து வீசிய விதம் அருமை. இதைத் தொடர்ந்து அவருக்குச் செய்வோம், அடிக்கடி அவரை இவ்வாறு வீழ்த்தி அவர் வாயை அடைப்போம்.” என்றார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: