Home /News /sports /

IndvEng Head to Head: 100வது போட்டியில் சாதிக்குமா இந்தியா?

IndvEng Head to Head: 100வது போட்டியில் சாதிக்குமா இந்தியா?

INDvENG

INDvENG

ICC World Cup 2019 | India Vs England | Virat Kohli | Eoin Morgan | உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - இங்கிலாந்து 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

  • News18
  • Last Updated :
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்தியா இன்று களமிறங்குகிறது. இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் 100-வது சர்வதேச ஒருநாள் போட்டி என்பது கூடுதல் சிறப்பு அம்சம்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அறிமுக தொடரான 1975-ல், முதல் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. லண்டனில் அரங்கேறிய அந்த போட்டியில் முதலில் களமாடிய இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்கள் சேர்த்தது.

கடின இலக்கை துரத்திய இந்தியா 60 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், 202 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.

இப்போட்டியில் தான் இந்திய தொடக்க வீரர் சுனில் கவாஸ்கர், 174 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 36 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதுவே, ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர் ஒருவரின் மந்தமான ஆட்டம் என இன்றளவும் விமர்சிக்கப்படுகிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில், இரு அணிகளும் இதுவரை 99 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்தியா 53 ஆட்டங்களிலும், இங்கிலாந்து 41 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இதில், இரண்டு போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - இங்கிலாந்து 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது.

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup

அடுத்த செய்தி