India vs England | இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு- இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வலுவான அணி

ரூட்-கோலி.

இந்தியாவுக்கு எதிராக ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

  • Share this:
    இந்தியாவுக்கு எதிராக ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

    வலுவான இங்கிலாந்து அணியில் பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக அபார சதம் எடுத்து 112 ரன்கள் எடுத்த ஹசீப் ஹமீது, மற்றும் அறிமுகப் போட்டியிலேயே அசத்திய ஆல்ரவுண்டர் ஆலி ராபின்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    17 வீரர்கள் கொண்ட அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோ்ர் இன்னமும் உடல்நலம் தேறாததால் இடம்பெறவில்லை, என்பது இந்திய அணியின் அதிர்ஷ்டம்.

    ஆலி ராபின்சன் நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பேட்டிங்கிலும் 47 ரன்களை எடுத்து முக்கியமான பங்களிப்பு செய்தார். அதன் பிறகு நிறவெறி பதிவுகளுக்காக தடை செய்யப்பட்டு தடை இன்னமும் உள்ளது ஆனால் அது இடைநீக்கத் தடை என்பதால் அவர் ஆடமுடியும். பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ உள்ளே வந்துள்ளனர், சாம் கரண் இருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஹசீப் ஹமீது 2016-ல் ஏற்கெனவே இந்தியாவுடன் டெஸ்ட் போட்டியில் இங்கு ஆடியுள்ளார் ராஜ்கோட்டில் அவர் 31 ரன்களும், 82 ரன்களும் எடுத்தவர். 3 டெஸ்ட் போட்டிகளில் 43.80 சராசரி வைத்துள்ளார். 219 ரன்களை எடுத்துள்ளார்.



    இங்கிலாந்து அணி விவரம்:

    ஜோ ரூட் (கேப்டன்), ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஜாக் கிராலி, சாம் கரண், ஹசீப் ஹமீது, டேன் லாரன்ஸ், ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், டாம் சிப்லி, மார்க் உட்.

    இந்தியா விளையாடி வரும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக கவுண்டி லெவன் அணி 220 ரன்களுக்குச் சுருண்டது, இந்த ஆட்டத்தில் டெஸ்ட் லெவனில் தேர்வாகியுள்ள ஹசீப் ஹமீது 112 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: