பென் ஸ்டோக்ஸ் கேட்சை பிடித்த தவான் முன் விழுந்து கும்பிட்ட ஹர்திக் பாண்டியா - வைரலாகும் ரியாக்ஷன்

பென் ஸ்டோக்ஸ் கேட்சை பிடித்த தவான் முன்  விழுந்து கும்பிட்ட ஹர்திக் பாண்டியா - வைரலாகும் ரியாக்ஷன்

ஹர்திக் பாண்டியா

பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்தை கேட்ச் பிடித்த தவானுக்கு ஹர்டிக் பாண்டியா கையெடுத்து கும்பிடு போட்ட ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய 10 விக்கெட்கள் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி கடைசி வரை கடுமையாக போராடியது. ஆனால் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 322 ரன்கள் மட்டுமே சேர்த்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. சாம் கரன் 95 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார்.

    இந்த போட்டியில் இந்திய வீரர்களின் ஃப்ல்டிங் அனைவரது விமர்சனத்தையும் பெற்றுள்ளது. ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், நடராஜன் ஆகியோர் கைக்கு வந்த எளிதான கேட்சை கோட்டை விட்டனர். அதிலும் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து அணியின் முக்கிய வீரரான ஸ்டோக்ஸ், இறுதியில் ஆட்டம் காட்டிய சாம் கரன் கேட்சை விட்டார்.

    சாம் கரன் கேட்சை ஹர்திக் பாண்டியா விட்டதால் போட்டி இறுதி ஓவர் வரை சென்றது. இதுப்போன்று ஸ்டோக்ஸ் தனது வாய்ப்பை பயன்படுத்தி இருந்தால் கண்டிப்பாக இந்திய அணி தோல்வியடைந்திருக்கும். ஸ்டோக்ஸின் கேட்சை ஹர்திக் தவறவிட்ட உடன் ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். 2-வது ஒரு நாள் போட்டியில் 99 ரன்களை விளாசி இங்கிலாந்தை எளிதாக வெற்றி பெற செய்தார். இதேப் போன்று இந்த போட்டியிலும் ஆகிவிடுமோ என்ற பதற்றத்தில் ஸ்டோக்ஸ் கேட்சை விட்ட ஹர்திக் பாண்டியா தவித்து இருந்து கொண்டார்.



    ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் நடராஜன் பந்துவீச்சை தூக்கி அடிக்க முயன்று தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஸ்டோக்ஸ் கேட்சை தவான் பிடித்தவுடன் நிம்மதி பெரு மூச்சு விட்ட ஹர்திக் மைதானத்தில் தவானை பார்த்து கையெடுத்து கும்பிட்டு விழுந்தார். இந்த காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
    Published by:Vijay R
    First published: