• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 60 ஓவர்கள் இங்கிலாந்துக்கு நரகமாக இருக்க வேண்டும்: கோலியின் சூடான பேச்சு- வீடியோ

60 ஓவர்கள் இங்கிலாந்துக்கு நரகமாக இருக்க வேண்டும்: கோலியின் சூடான பேச்சு- வீடியோ

இரு அணிகளும் களத்தில் மோதிக்கொண்டன, வார்த்தை மோதல், கோலி-பட்லர் பேசித்தீர்க்கும் தருணம்.

இரு அணிகளும் களத்தில் மோதிக்கொண்டன, வார்த்தை மோதல், கோலி-பட்லர் பேசித்தீர்க்கும் தருணம்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் புகழ்பெற்ற வெற்றியை ஈட்டியது இந்திய அணி. அதற்குக் காரணம் பவுலர்களின் பேட்டிங்கும் பவுலிங்கும்தானே தவிர விராட் கோலி கிடையாது. ஆனால் வீரர்களை மோட்டிவேட் செய்து அவர் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது.

  • Share this:
    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் புகழ்பெற்ற வெற்றியை ஈட்டியது இந்திய அணி. அதற்குக் காரணம் பவுலர்களின் பேட்டிங்கும் பவுலிங்கும்தானே தவிர விராட் கோலி கிடையாது. ஆனால் வீரர்களை மோட்டிவேட் செய்து அவர் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது.

    மொத்தத்தில் வாயிலேயே வடை சுடும் கேப்டனாக விராட் கோலி இருப்பதிலிருந்து பேட்டிங்கில் எப்படி மீண்டும் பார்முக்கு வரப்போகிறார் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

    இதையும் பாருங்க: பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

    இந்நிலையில் அன்று ஷமி, பும்ரா ஹீராயிக் இன்னிங்சுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, ஒருக்காலும் இதை இங்கிலாந்து விரட்டப்போவதில்லை, ட்ராவுக்குத்தான் ஆடப்போகின்றனர் என்பது திண்ணம் என்பதால் அவர்களை வீழ்த்துவது எளிதானது. ஒருவேளை அவர்கள் இலக்கு நோக்கி அடித்து ஆடியிருந்தால் ட்ராவாவது செய்திருக்கலாம்.

    120 ரன்களுக்கு மடிந்து தோற்றது இங்கிலாந்து.



    இந்நிலையில் இங்கிலாந்து தோல்வியிலிருந்து காத்துக் கொள்ள இறங்கிய தருணத்தில் விராட் கோலி அணி வீரர்களை சுற்றி நிறுத்திக் கொண்டு ‘பெப் டாக்’ ஒன்று கொடுத்தார், அது வழக்கமாக எல்லா கேப்டன்களும் கொடுக்கக் கூடியதுதான். ஆனால் கொடுப்பது விராட் கோலியாயிற்றே அதனால் அதற்கு முக்கியத்துவம் ஏற்பட்டு விட்டது.

    “இந்த 60 ஓவர்கள் இங்கிலாந்துக்கு களத்தில் நரகமாக இருக்க வேண்டும்” என்று பவுலர்கள் வீரர்களுக்கு உத்வேகம் அளித்தார் கோலி. இது வீடியோவில் பதிவாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் உண்மையில் இங்கிலாந்து வீரர்களுக்கு 60 ஓவர்கள் நரகமாக இல்லை, ‘ஐ’ படப் பாணியில் கூற வேண்டுமென்றால் ‘அதுக்கும் மேல’.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: