• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • INDvsENG | இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள் யார்?

INDvsENG | இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள் யார்?

டீம் இந்தியா

டீம் இந்தியா

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

  • Share this:
    இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று மதியம் நாட்டிங்காம் மைதானத்தில் தொடங்க உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தோல்விக்கு பின் இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட தொடரும் இதுவாகும். மேலும் இரு அணிகளுக்கு அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தொடக்கம் இது என்பதால் போட்டி பரபரப்பாகவே இருக்கும்.

    கொரோனா தொற்று காரணமாக உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் இறுதி போட்டி முடிவடைந்த பின்னும் இந்திய அணி இங்கிலாந்தில் தங்கியிருந்தனர். சுப்மன் கில் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்பதால் கே.எல்.ராகுல் ஓபனிங் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் 4 வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்க வாய்ப்புள்ளது. சுழற்பந்தில் அஸ்வின் பலமாக இருப்பதால் அவருக்கு அணியில் கட்டாயம் இடம் உண்டு என்பதில் சந்தேகமில்லை.

    இந்திய உத்தேச அணி : ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சத்தீஸ்வர் புஜாரா, ரஹானே, விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஸ்வின், சர்துல் தாகூர், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: