ரகானே காயமடைந்ததால்தான் துர்ஹாம் பயிற்சியாட்டத்தில் ஆடவில்லை. கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது, எனவே கோலி ஆடுவதில் சிக்கல் இல்லை, ஆனால் பிசிசிஐ என்ன கூறுகிறது எனில் துணை கேப்டன் ரகானே முதல் டெஸ்ட்டுக்குள் ரெடியாகி விடுவார் என்று தன்னம்பிக்கையுடன் உள்ளது.
அப்படி ரகானே ஆடினார் என்றால் புஜாராவை உட்கார வைக்க ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன. ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2018-019 தொடரில் 3 சதங்கள் அடித்து பெரிய பெயர் பெற்ற புஜாரா அதன் பிறகு 18 டெஸ்ட் போட்டிகளில் சதம் எடுக்கவில்லை. மேலும் இந்த 18 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 28 என்று மிகக்குறைவாக உள்ளது.
மேலும் அவர் ஓவர் பிட்ச், ஷார்ட் பிட்ச் போன்ற ரன் வரும் பந்துகளையும் தடுத்தாடுகிறார், இல்லை ஆடாமல் விடுகிறார், அல்லது நேராக பீல்டர் கையில் அடித்து ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வதில்லை. இதனால் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மென்களின் ரிதம் கெட்டுப் போகிறது, மேலும் கோலி போன்ற ஒரு தலைசிறந்த பேட்ஸ்மென் தொடர்ந்து ஒருமுனையில் ஒரே பவுலரைச் சந்தித்தால் அவரும் ஆட்டமிழப்பதில்தான் போய் முடியும்.
3 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் போட்டியில் அவர் நீக்கப்பட்டார், எனவே இந்த முறையும் அவர் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டால் அது ஆச்சரியமாக இருக்காது.
ரகானே ஆடவில்லை என்றாலும் 2 பேட்ஸ்மென்களிடையே போட்டி உள்ளது, ஒன்று ஹனுமா விகாரி, மற்றொருவர் கே.எல்.ராகுல் இருக்கின்றனர், ஒருவேளை ஹனுமா விகாரி, ராகுல் இருவருமே தேவை என்று கோலி நினைத்தால் நிச்சயம் புஜாராவுக்கு கல்தாதான். மயங்க் அகர்வால், ரோகித் சர்மா தொடக்கத்தில் இறங்க, கோலி 4ம் நிலை ரகானே டவுனில் ராகுலோ அல்லது விகாரியோ இறக்கப்பட புஜாராவுக்கு பதில் இவர்களில் ஒருவர் 3ம் இடத்தைப் பிடித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
மேலும் ராகுல் பயிற்சியாட்டத்தில் சதம் எடுத்ததால் புஜாராவுக்கு பதில் அவரை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது, அதாவது ரகானே ஆடுகிறார் என்றால்.
இந்திய அணிக்கு ஆறுதலான விஷயம் ரிஷப் பந்த் முதல் டெஸ்ட்டில் ஆடத் தயாராகி விட்டார். பிட்ச் உள்ளிட்ட நிலைமைகள் ஸ்பின்னுக்குச் சாதகமில்லை எனில் ஷர்துல் தாக்கூர் ஒரு ஆல்ரவுண்ட் சாத்தியமாக அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
இந்திய அணி இப்படியிருக்கலாம்:
ரோகித் சர்மா, மாயன்க் அகர்வால், கே.எல்.ராகுல், கோலி, ஹனுமா விகாரி/ரகானே, ரிஷப் பந்த், அஸ்வின், இஷாந்த் சர்மா, பும்ரா, ஷமி, ஷர்துல் தாக்கூர்/ஜடேஜா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England, Test series