ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

போச்சுரா! டிரா வெறுப்பு போதாதுன்னு இது வேறயா?- முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்தன

போச்சுரா! டிரா வெறுப்பு போதாதுன்னு இது வேறயா?- முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்தன

ஜோ ரூட்-விராட் கோலி

ஜோ ரூட்-விராட் கோலி

நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மழையால் தோல்வியிலிருந்து கிரேட் எஸ்கேப் ஆக, இந்திய அணி நழுவிப்போன வெற்றி வாய்ப்பில் வெறுப்படைந்த நிலையில் தற்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இரு அணிகளுமே இழந்துள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மழையால் தோல்வியிலிருந்து கிரேட் எஸ்கேப் ஆக, இந்திய அணி நழுவிப்போன வெற்றி வாய்ப்பில் வெறுப்படைந்த நிலையில் தற்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இரு அணிகளுமே இழந்துள்ளன.

ஆம்! மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் என்ன ஸ்லோ ஓவர் ரேட் வேண்டியிருக்கிறது? ஆனால் இங்கிலாந்தும் இந்தியாவும் தலா இரண்டு புள்ளிகளை இழந்து விட்டன. காரணம் குறித்த நேரத்திற்கான ஓவர்களை இரு அணிகளும் வீசவில்லையாம்.

இதோடு 40% ஆட்டத் தொகை அபராதமும் இரு அணிகளும் செலுத்த வேண்டும் என்று கிறிஸ் பிராட் அபராதம் விதித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய புள்ளிகளின் படி இரு அணிகளுக்கும் 4 புள்ளிகள் கிடைத்தன, இப்போது ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இரு அணிகளும் தலா 2 புள்ளிகளை இழந்தன.

பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இரு அணிகளுமே 4 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு ஆடியது, இதனால் ஓவர்களை முடிக்க நேரம் ஆகத்தானே செய்யும். நம் கேள்வி எல்லாம் ட்ரா ஆன போட்டிக்கு , அதுவும் மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் என்ன ஸ்லோ ஓவர் ரேட் வேண்டிக்கிடக்கிறது என்பதே.

முதல் டெஸ்ட்டில் வீசப்பட்ட 250.2 ஓவர்களில் 16 ஓவர்கள் தவிர மீதி எல்லாம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசியதே.

மேலும் இங்கிலாந்து பவுலர்களை கே.எல்.ராகுல் போதிய வெளிச்சமின்மையால் காக்கவைத்தார், அதே போல் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் முகமது சிராஜை காக்க வைத்து தாமதம்செய்தனர். மழை அடிக்கடி குறுக்கிட்டது. இதனால் அனைவரும் ரெடியாக தாமதமானது. இந்தக் காரணிகளை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் முட்டாள் தனமாக புள்ளிகளை குறைத்துள்ளார் ஐசிசி ஆட்ட நடுவர் கிறிஸ் பிராட்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புள்ளிகளைக் குறைப்பது பின்னால் பெரிய சிக்கலில் கொண்டு போய் விடும். கடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா இப்படித்தான் ஸ்லோ ஓவர் ரேட்டில் 4 புள்ளிகளை இழந்தது. இந்தியாவுக்கு எதிராக பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மெல்போர்னில் ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக ஆஸ்திரேலியா 4 புள்ளிகளை இழந்தது, இதனையடுத்து அந்த அணி இறுதியில் பங்கேற்கும் வாய்ப்பை நியூசிலாந்திடம் இழந்தது.

First published:

Tags: ICC World Test Championship, India Vs England