Home /News /sports /

69 ஆண்டுகால சாதனையை உடைத்தார் ரிஷப் பண்ட் - புஜாரா அவுட்

69 ஆண்டுகால சாதனையை உடைத்தார் ரிஷப் பண்ட் - புஜாரா அவுட்

பண்ட் - புஜாரா

பண்ட் - புஜாரா

Rishabh Pant World Records: விக்கெட் கீப்பர்களின் 5 அன்னிய மண் டெஸ்ட் ஸ்கோர்களில் இப்போது ரிஷப் பண்ட் 3 டாப் ஸ்கோர்களை எடுத்துள்ளார்.

    ரிஷப் பண்ட் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் 111 பந்துகளில் 146 ரன்கள் எடுத்ததோடு 2வது இன்னிங்சில் தற்போது பொறுமையின் திலகமாக 62 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார், இதன் மூலம் விக்கெட் கீப்பராக ஆசியாவுக்கு வெளியே ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

    1953-ல் விஜய் மஞ்சுரேக்கர் கிங்ஸ்டனில் 161 ரன்கள் எடுத்தார் இந்த சாதனையானது மிக நீண்ட காலமாக உடைக்கப்படாமல் இருந்தது இப்போது ரிஷப் பண்ட் அந்த இடத்தில் தன் பெயரை பொறித்துள்ளார்.

    விக்கெட் கீப்பர்களின் 5 அன்னிய மண் டெஸ்ட் ஸ்கோர்களில் இப்போது ரிஷப் பண்ட் 3 டாப் ஸ்கோர்களை எடுத்துள்ளார். சிட்னி டெஸ்ட்டில் இதற்கு முன் 2018 மற்றும் 2021-ல் அதிக ரன்களை விக்கெட் கீப்பராக டெஸ்ட் போட்டியில் எடுத்தார்.

    ஏற்கெனவே இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெயருக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்ட ரிஷப் பண்ட் இப்போது ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார்.

    ரிஷப் பண்டின் இந்த இன்னிங்ஸ்களில் பல மேட்ச்-வின்னிங் அல்லது மேட்ச்-சேவிங் இன்னிங்ஸ்களாகும் அணிக்கு மிகவும் தேவைப்படும் தருணங்களில் ரிஷப் பண்ட் ஆடிக்கொடுத்துள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவரது முதல் இன்னிங்ஸ் ஸ்கோர், இந்தியாவுக்கு வெளியே அவரது நான்காவது சதம் அதுவும் அவரது 31வது டெஸ்ட் போட்டியில் என்பது கவனிக்கத்தக்கது.

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இன்று 125/3 என்று தொடங்கிய இந்திய அணி சற்று முன் புஜாரா (66) விக்கெட்டை பிராடிடம் இழந்தது, பாயிண்டில் தூக்கி அடிக்கப் போய் கேட்ச் ஆனார் புஜாரா. 168 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அவ்ர் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 154, ரிஷப் பண்ட் 30 பேட்டிங், அய்யர் 1 பேட்டிங்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cheteshwar Pujara, India Vs England, Rishabh pant

    அடுத்த செய்தி