Bumrah World Record- பும்ரா உலக சாதனை - பிராடின் ஒரே ஓவரில் 35 ரன்கள்: இந்தியா 416 ரன்களுக்கு ஆல் அவுட்
Bumrah World Record- பும்ரா உலக சாதனை - பிராடின் ஒரே ஓவரில் 35 ரன்கள்: இந்தியா 416 ரன்களுக்கு ஆல் அவுட்
பும்ரா உலக சாதனை, லாரா சாதனையை உடைத்தார்
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் சற்று முன் இந்தியா உலக சாதனை நிகழ்த்தியது, ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசப்பட்டது, விளாசியவர் பும்ரா. இதில் 4 பௌண்டரிகள் 2 சிக்சர்களை விளாசி 29 ரன்களை மட்டையில் எடுத்ததன் மூலம் பிரையன் லாரா எடுத்த ஒரே ஓவர் 28 ரன்கள் டெஸ்ட் உலக சாதனையை முறியடித்தார் பும்ரா.

ஸ்டூவர்ட் பிராட் வீசிய இன்னிங்சின் 84வது ஓவர் மிக மோசமாக அமைந்தது பிராடுக்கு: வெளுத்து வாங்கி விட்டார் பும்ரா: அந்த ஓவரில் நடந்தது இதுதான்:
முதல் பந்து ஹூக் பவுண்டரி அடுத்த பந்து ஷார்ட் பிட்ச் பவுன்சர் 5 வைடுகள் 2வது பந்து நோ-பால் ஆனால் பும்ரா அடித்த ஷாட் சிக்ஸ் மீண்டும் 2வது பந்து புல்டாஸை பும்ரா பவுண்டரி விளாசித் தள்ளினார். 3வது பந்து பைன்லெக்கில் பவுண்டரி பறந்தது. 4வது பந்து பவுண்டரி அடித்தார் பும்ரா. இதோடு உலக சாதனை 28 ரன்களை சமன் செய்தார் பும்ரா அடுத்த 5வது பந்து பும்ரா மீண்டும் ஹூக் ஷாட் டீப் பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ். உலக சாதனை 6வது பந்து சிங்கிள். ஒரே ஓவரில் 35 ரன்கள் பும்ரா ஒரே ஓவரில் மட்டையில் அடித்த 29 ரன்கள் உலக சாதனை ஓவரானது.
ஒரே ஓவரில் 35 ரன்களால் பிராட் அனாலிசிஸ் 18 ஓவர் 89 ரன்களானது, இங்கிலாந்து எக்ஸ்ட்ராஸ் 40 ரன்கள்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.