லார்ட்ஸ் தோல்வி எதிரொலி: இங்கிலாந்து அணியில் மாற்றங்கள்

டேவிட் மலான் மீண்டும் அழைப்பு.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 60 ஓவர்கள் தாங்காமல் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது.

  • Share this:
    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 60 ஓவர்கள் தாங்காமல் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது.

    ஆகஸ்ட் 25ம் தேதி லீட்ஸில் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டிக்காக டி20 ஸ்டார் டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார். மலான் இதற்கு முன்பாக 15 டெஸ்ட் போட்டிகளில் 724 ரன்கள் எடுத்தார். 2018-ல் இந்தியாவுடன் பர்மிங்ஹாமில் கடைசியாக டெஸ்ட்டில் ஆடியிருந்தார். டாம் சிப்ளி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    மார்க் உட் 3வது டெஸ்ட் போட்டிக்குள் காயத்திலிருந்து குணமடைந்து விடுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. லங்காஷயர் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மஹ்மூத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட் கூறும்போது, “டெஸ்ட் தொடர் மிக அழகான நிலையில் உள்ளது. ஹெடிங்லீயில் இங்கிலாந்து மீண்டெழுந்து வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் டேவிட் மலான் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, அவர் இந்த தேர்வுக்கு உரியவர்தான். அனைத்து வடிவங்களிலும் நல்ல அனுபவம் பெற்றுள்ளார், அதனால் டெஸ்ட்டில் பிரமாதமாக ஆடுவார் என்று எதிர்பார்க்கிறோம், யார்க்‌ஷயர் அணிக்காக சசக்ஸ் அணிக்கு எதிராக 199 ரன்கள் எடுத்தார் டேவிட் மலான்.

    ஜாக் கிராலியும் லார்ட்ஸ் வலைப்பயிற்சியில் உதவிப் பயிற்சியாளர் கிரகாம் த்ரோப்புடன் சிறப்பாகப் பணியாற்றினார். டாம் சிப்ளிக்கு கொஞ்சம் பயிற்சியும் இடைவெளியும் தேவைப்படுகிறது. வார்விக்‌ஷயருக்குத் திரும்பி அவர் மீண்டும் நம்பிக்கை பெற அனுப்பப்படுகிறார்.” என்றார் கிறிஸ் சில்வர் உட்.

    இங்கிலாந்து அணி விவரம்:

    ரூட், மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரன், ஹசீப் ஹமீத், டேன் லாரன்ஸ், சாகிப் மஹ்மூத், டேவிட் மலான், கிரெய்க் ஓவர்டன், ஆலி போப், ஆலி ராபின்சன், மார்க் உட்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளதோடு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளாக 14 புள்ளிகள் பெற்றுள்ளது.
    Published by:Muthukumar
    First published: