ரோகித் சர்மாவின் 100வது போட்டியில் கே.எல்.ராகுல் 100- ஜடேஜா அபாரம்- இந்தியா 306/9

சதமெடுத்த ராகுல்

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து கவுண்டி செலக்ட் லெவன் அணிக்கும் இடையிலான மூன்று நாள் பயிற்சி முதல் தர போட்டியில் இந்திய அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 306/9 என்று முடித்துள்ளது, கே.எல்.ராகுல் 101 ரன்கள் எடுத்து சதமெடுத்தார்.

 • Share this:
  செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து கவுண்டி செலக்ட் லெவன் அணிக்கும் இடையிலான மூன்று நாள் பயிற்சி முதல் தர போட்டியில் இந்திய அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 306/9 என்று முடித்துள்ளது, கே.எல்.ராகுல் 101 ரன்கள் எடுத்து சதமெடுத்தார்.

  இந்திய வீரர்கள் ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் எதிரணியில் ஆடினாலும் இந்தப் போட்டிக்கு முதல் தர போட்டி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது, ரோகித் சர்மா தன் 100வது முதல் தரப் போட்டியில் ஆடினார். ஆனால் சொதப்பினார். கோலி, ரகானே காயம் காரணமாக ஆடவில்லை. ஸ்டாண்ட் இன் கேப்டன் ரோகித் சர்மா முதல் ரன்னை எடுக்க 10 பந்துகள் எடுத்துக் கொண்டார், 33 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து அவர் புல் ஷாட் டாப் எட்ஜ் எடுக்க ஜேம்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

  Also Read: India vs Sri Lanka: சபாஷ் தீபக் சாகர்! ரசித்த சீனியர் வீரர்கள், வாசிம் ஜாஃபர் மீம்

  அகர்வால் 28 ரன்களில் 6 பவுண்டரிகள் எடுத்து ஆடிய போது அவரது வழக்கமான இன்ஸ்விங்கர் பலவீனம் வெளிப்பட ஸ்டம்புக்குள் பந்து ஊடுருவியது. போல்ட், பாட் கமின்ஸ், ஸ்டார்க் போன்ற பவுலர்கள் ஏற்கெனவே இந்த துர்சொப்பனத்தை அகர்வாலுக்கு வழங்கியுள்ளனர். புஜாரா (21) ஸ்டம்ப்டு ஆனார், இது ஸ்பின்னர் கார்சனின் 50வது விக்கெட் ஆனது. ஹனுமா விகாரி 24 ரன்களில் வெளியேறினார். 107/4 என்று இந்திய அணி திணறியது.

  Also Read: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆக வேண்டும்- தீபக் சாகர் கனவு நிறைவேறியது- படங்கள்

  அப்போது கே.எல்.ராகுல், ஜடேஜா ஜோடி சேர்ந்து ஸ்கோரை 234 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். 127 ரன்கள் கூட்டணி அமைத்தனர் ஜடேஜாவும், ராகுலும். பிட்சில் பந்துகள் எழும்புவதும் தாழ்வதுமாக இருந்ததால் ராகுல் நிதானமாக ஆடி 75 பந்துகளில் அரைசதம் கண்டார், பிறகு 150 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 101 அடித்து ரிட்டையர்டு அவுட் ஆனார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஸ்பின்னர்களை மேலேறி வந்து பிரமாதமாக ஆடினார் ராகுல், மறுமுனையில் ஜடேஜா பின்பக்கமாக நிறைய ரன்களை எடுத்தார். 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 146 பந்துகளில் 75 எடுத்து 2வது புதிய பந்தில் வெளியேறினார். ஷர்துல் தாக்கூர் 20, அக்சர் படேல் 0, உமேஷ் யாதவ் 12 ரன்களில் வெளியேற இந்தியா 306/9 என்று உள்ளது, கிரீசில் பும்ரா 3 ரன்களுடனும் சிராஜ் 1ரன்னுடனும் இருக்கின்றனர்.
  Published by:Muthukumar
  First published: