நான் பார்த்ததிலேயே மோசமான பிட்ச்: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5ம் நாள் ஆட்டம் குறித்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர்!

நான் பார்த்ததிலேயே மோசமான பிட்ச்: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5ம் நாள் ஆட்டம் குறித்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர்!

ஜோஃப்ரா ஆர்ச்சர்

பிரிட்டனைச் சேர்ந்த டெய்லி மெய்லுக்கு ஜோப்ரா ஆர்ச்சர் எழுதியுள்ள கட்டுரையில், 5ம் நாள் ஆட்டத்தின் போது நான் பார்த்ததிலேயே மோசமான சர்ஃபேஸ் அதுவாகத்தான் இருக்கும். பந்து வீச்சாளர்கள் குறி வைக்கும் வகையில் அங்கு எதுவும் அமையவில்லை என எழுதியுள்ளார்

  • Share this:
சென்னையில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் பிட்ச் தன்னை ஈர்க்கும் வகையில் அமையவில்லை என இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்தார். ஆடுகளத்தை பார்த்த தருணத்தில் 'தான் கண்ட மிக மோசமான பிட்ச்' எனவும் விவரித்தார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் டெஸ்டில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 5 வருடங்களுக்கு பின்னர் சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் உள்ளூர் ஹீரோக்களான ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்களின் திறமையை அபாரமாக வெளிப்படுத்திய நிலையிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்களை கவலைக் கொள்ளச் செய்வதாக அமைந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்சர், சென்னை மைதானத்தை பார்த்ததிலேயே மோசமான பிட்ச் என வசைபாடியுள்ளார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர்


பிரிட்டனைச் சேர்ந்த டெய்லி மெய்லுக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையில், 5ம் நாள் ஆட்டத்தின் போது நான் பார்த்ததிலேயே மோசமான சர்ஃபேஸ் அதுவாகத்தான் இருக்கும். பந்து வீச்சாளர்கள் குறி வைக்கும் வகையில் அங்கு எதுவும் அமையவில்லை.

9 விக்கெட்கள் வீழ்த்த வேண்டிய நிலையில் மைதானத்தில் நடந்து சென்றோம். இதனை செய்து . முடிப்போம் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம். இருப்பினும் இந்திய வீரர்கள் சொந்த ஊரில் மிகுந்த பலசாளிகள், எனவே அந்த சூழல் அவர்களுக்கு உகந்ததாகவே இருக்கும் என எண்ணினோம். ஆனால் மதிய உணவு இடைவேளைக்கு சிறிது நேரத்திலேயே அவர்களை வீழ்த்துவோம் என நினைக்கவில்லை.

இந்த வெற்றியில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அவர் 192 ரன்களுக்குள் இந்தியாவை கட்டுப்படுத்த உதவினார். அவரின் அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங் மூலம் இந்திய அணியின் முதல் இரண்டு விக்கெட்களை விரைவாக வீழ்த்தினோம் என்றார்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: