சென்னை டெஸ்டில் தடுமாறும் இந்தியா... ஃபாலோ-ஆன் தவிர்க்க எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும்?

சென்னை டெஸ்டில் தடுமாறும் இந்தியா... ஃபாலோ-ஆன் தவிர்க்க எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும்?

India vs England

India vs England Chennai Test | இந்திய அணி 135 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.

 • Share this:
  இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

  இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சென்னை டெஸ்டில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

  இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் 2 நாட்களுக்கு மேலாக தடுமாறினார்கள். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். சென்னை டெஸ்டில் 3-வது நாளான இன்று இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய தரப்பில் அஸ்வின் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

  இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்பத்திலேயே 6 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் அவுட்டாகி ரோஹித் சர்மா அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து சில ஓவர்களிலேயே சுப்மன் கில்லும் ஆர்சர் பந்துவீச்சில் 29 ரன்களில் வெளியேறினார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கலங்கவைத்த புஜாரா இங்கிலாந்து அணிக்கு எதிராக பாறை போல் இருந்தாலும் கேப்டன் கோலி 11 ரன்னிலும், துணை கேப்டன் ரஹானே 1 ரன்னிலும் அவுட்டாகினர்.

  இதை தொடர்ந்து இளம் வீரர் ரிஷப் பந்த் மற்றும் புஜாரா இருவரும் அரைசதம் கடந்து பொறுமையுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 135 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. இந்திய அணி ஃபாலோ ஆன் எடுப்பததை தவிர்க்க 379 ரன்கள் எடுக்க வேண்டும்.

  ஐசிசி டெஸ்ட் சாம்பியன் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடதக்கது.
  Published by:Vijay R
  First published: