India vs England | சென்னையில் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்.. இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் யார்?

இந்திய அணி

Inida vs England | பந்துவீச்சை பொறுத்தவரை அக்‌ஷர் படேல் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார்.

  • Share this:
    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கொரோனோ கால முடக்கத்திற்கு பிறகு இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை களைகட்ட உள்ளது.

    இந்திய அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் ரோஹித், கில் ஜோடி சிறப்பான தொடக்கம் வழங்க தடுமாறி வருகிறது. நிலைத்து நின்று விளையாட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். விராட், ரஹானே, புஜாரா ஆகியோர் மிடில் ஆர்டரில் தொடர்ந்து ரன் சேர்க்க முடியாமல் திணறுகின்றனர். ரிஷப் பண்ட் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.

    பந்துவீச்சை பொறுத்தவரை அக்‌ஷர் படேல் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார். நதீமிற்கு பதில் இரண்டாவது டெஸ்டில் அக்‌ஷர் படேல் களமிறங்குகிறார். பும்ரா, இஷாந்த், அஸ்வின், வாஷிங்டன், அக்‌ஷர் படேல் கூட்டணி பந்துவீச்சில் கலக்க காத்திருக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி நடைபெறுவது கூடுதல் பலத்தையும் வெற்றிக்கான நம்பிக்கையையும் அதிகரித்திருப்பதாக துணைக்கேப்டன் ரஹானே உற்சாகமடைந்துள்ளார்.

    இந்திய உத்தேச அணி : ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்). ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவிசந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், இஷாந்த் சர்மா, பும்ரா
    Published by:Vijay R
    First published: