Ind vs Eng | இந்திய அணி பேட்டிங் தேர்வு... அணியில் 3 முக்கிய மாற்றங்களை அறிவித்த கோலி

India vs England

India vs England | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது.

  • Share this:
    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மேலும் இந்திய அணியில் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், நதீம் ஆகியோருக்கு பதிலாக அக்ஷர் படேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை களைகட்ட உள்ளது.

    இந்திய அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது.

    பேட்டிங்கில் ரோஹித், கில் ஜோடி சிறப்பான தொடக்கம் வழங்க தடுமாறி வருகிறது. நிலைத்து நின்று விளையாட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். விராட், ரஹானே, புஜாரா ஆகியோர் மிடில் ஆர்டரில் தொடர்ந்து ரன் சேர்க்க முடியாமல் திணறுகின்றனர். ரிஷப் பண்ட் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.
    Published by:Vijay R
    First published: