முகப்பு /செய்தி /விளையாட்டு / சிராஜ், குல்தீப் நீக்கம், பும்ரா, வாஷிங்டன் சுந்தர் அணியில்- இங்கிலாந்து பேட்டிங்

சிராஜ், குல்தீப் நீக்கம், பும்ரா, வாஷிங்டன் சுந்தர் அணியில்- இங்கிலாந்து பேட்டிங்

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்.

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்.

இந்திய அணி: ரோஹித், ஷுப்மன், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பந்த், அஸ்வின், சுந்தர், அக்சர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கிய பகலிரவு பிங்க் நிற பந்து டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இந்திய அணியில் முகமது சிராஜ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு பதிலாக பும்ரா, வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெற்றுள்ளனர். மீண்டும் குல்தீப்பை உட்கார வைத்து தவறு செய்துள்ளார் கோலி.

இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர், ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஜாக் கிராலி திரும்பியுள்ளனர். ஆலி ஸ்டோன் இல்லை. பிராட் இருக்கிறார் ஆகவே 3 வேகப்பந்து வீச்சாளர்கள், கூட பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்பின்னர் ஜாக் லீச் உள்ளார், மொயின் அலி நீக்கப்பட்டுள்ளார்.

இஷாந்த் சர்மா, பும்ரா வீசும் முதல் ஓவர்களில் பிட்சில் பவுன்ஸ் இருப்பது தெரிய வருகிறது, ரிஷப் பந்த் முகம், நெஞ்சுக்கு வருகிறது பந்துகள்.

டாஸ் தோற்ற கோலி கூறும்போது, “இது முதலில் பேட் செய்ய வேண்டிய பிட்ச். பிட்சைப் பார்த்தால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் போல் தெரிகிறது, அதாவது குறைந்தது முதல் சில ஓவர்களுக்கு இருக்கும் போல் தெரிகிறது. பிரமாதமான ஸ்டேடியம், உலகிற்கே பிரமாத ஸ்டேடியம், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் ஸ்டேடியம்.

வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடுவார் என்பதால் அது பயனளிக்கும் என்று சேர்க்கப்பட்டுள்ளார், பும்ரா திரும்பியுள்ளார்” என்றார்.

இந்திய அணி: ரோஹித், ஷுப்மன், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பந்த், அஸ்வின், சுந்தர், அக்சர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா

இங்கிலாந்து அணி: சிப்லி, பேர்ஸ்டோ, கிராலி, ரூட், ஸ்டோக்ஸ், போப், பென் ஃபோக்ஸ், ஆர்ச்சர், லீச், ஆண்டர்சன், பிராட்.

First published:

Tags: Ahmedabad, Cricket, India Vs England, Jasprit bumrah, Washington Sundar