• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • India vs England | இந்திய அணியில் பும்ரா ஏன் இல்லை..? விராட் கோலி விளக்கம்

India vs England | இந்திய அணியில் பும்ரா ஏன் இல்லை..? விராட் கோலி விளக்கம்

India vs England

India vs England

பும்ரா, வாஷிங்டன் சுந்தர், நதீம் ஆகியோருக்கு பதிலாக முகமது சிராஜ், அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், நதீம் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

    இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மேலும் இந்திய அணியில் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், நதீம் ஆகியோருக்கு பதிலாக முகமது சிராஜ், அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    டாஸ்க்கு பின் பேசிய கேப்டன் விராட் கோலி, “அக்ஷர் படேல் காயத்திலிருந்து குணமடைந்து விட்டதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். துரதிர்ஷடவசமாக வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்ட போதும் நாங்கள் அவரை அணியில் தேர்வு செய்யமுடியவில்லை. குல்தீப் யாதவ் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பும்ராவிற்கு இந்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது“ என்றார்.

    இங்கிலாந்து தொடர் நீண்டது என்பதால் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக மீதம் 2 டெஸ்ட் போட்டி, டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் இருப்பதால் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விளையாடுவது அவர்களை சோர்வுப்படுத்தும் என்பதால் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு முகமது சிராஜ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: