• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மூன்றாவது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ்? இங்கிலாந்து பயிற்சியாளர் பதில்

மூன்றாவது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ்? இங்கிலாந்து பயிற்சியாளர் பதில்

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் மீண்டும் விளையாடுவாரா என்ற கேள்விக்கு இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பதிலளித்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  • Share this:
    லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு பின் 3-வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்ற கேள்விக்கு இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பதிலளித்துள்ளார்.

    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவிடம் 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சொந்த மண்ணில் இங்கிலாந்து வீரர்கள் சோபிக்காமல் உள்ளனர். பேட்டிங்கில் கேப்டன் ஜோ ரூட் மற்றும் பவுலிங்கில் ஆண்டர்சன் தவிர யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

    இந்நிலையில் லார்ட்ஸ் தோல்விக்கு பின் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் விளையாட உள்ளார் என்று ஊகங்கள் கிளம்ப தொடங்கின. பென் ஸ்டோக்ஸ் மீண்டும் விளையாடுவாரா என்ற கேள்விக்கு இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பதிலளித்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    Also Read : கபில்தேவை விஞ்சிய மொகமட் சிராஜ்; இங்கிலாந்தில் 7 பேர் டக் அவுட்- லார்ட்ஸ் சுவாரசியங்கள்

    பயிற்சியாளர் சில்வர்வுட் கூறுகையில், நாங்கள் ஸ்டோக்ஸை அணிக்கு திரும்பி வரசொல்லி நிர்பந்திக்க மாட்டோம். இதுப்போன்ற சந்தர்பங்களால் அவருக்கு மீண்டும் மனஅழுத்தம் அதிகரிக்கலாம். அவரே வந்து நான் விளையாட தயார் என்று சொல்லும் வரை நாங்கள் காத்திருப்போம். அவருக்கு நாங்கள் எந்த அழைப்பும் விடுக்கப்போவதில்லை என்றார். ஸ்டோக்ஸ் விவகாரத்தில் சில்வர்வுட்டின் கருத்தையே கேப்டன் ஜோ ரூட்டும் தெரிவித்துள்ளார்.

    Also Read : எங்க ஆள் ஒருத்தர் மேல நீங்க கைய வச்சா நாங்க 11 பேரும் வருவோம்: கே.எல்.ராகுல் பஞ்ச் டயலாக்

    பென் ஸ்டோக்ஸ் கடந்த மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் 3-0 என்ற வெற்றிக்கு பின் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற விடுவிப்பு எடுத்தார். மனஅழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து சிறுது ஓய்வு தேவைப்படுவதாக பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார். பென் ஸ்டோக்ஸின் இந்த முடிவு இங்கிலாந்து ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: