India vs England: தேறுமா இந்திய அணி?- கோலி படைக்கு வயிற்றைக் கலக்கும் பிட்ச் தயார்

முதல் டெஸ்ட்டுக்கு தயாராகும் கிரீன் டாப் பிட்ச்

ஆகஸ்ட் 4ம் தேதி இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் தொடங்குகிறது, இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான பிட்ச்சின் படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

 • Share this:
  ஆகஸ்ட் 4ம் தேதி இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் தொடங்குகிறது, இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான பிட்ச்சின் படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

  பிட்சில் ஏகப்பட்ட புற்கள் உள்ளன, பயங்கரமாக ஸ்விங், பவுன்ஸ் இருக்கும் போல் தெரிகிறது. பிட்சுக்கும் பெரும்பங்கு மைதானத்துக்கும்  ஓரளவுக்குத்தான் வித்தியாசம் தெரிகிறது.

  ஆனால் ஆட்டம் தொடங்கும்போது எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் கிரீன் டாப் பிட்ச் ஆகத்தான் இருக்கும்.

  இது போன்ற பிட்சில் அஸ்வின் எடுபடுவாரா என்பது சந்தேகம், ஆனால் ஜடேஜா நிச்சயம் தாங்க மாட்டார். எனவே முகமது சிராஜை அணியில் சேர்ப்பதே கோலிக்கு நல்லது.

  ஏற்கெனவே நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில் டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர், ட்ரெண்ட் போல்ட்டிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டு 3 நாட்களில் டெஸ்ட் முடிந்தது. நியூசிலாந்து சாம்பியன்கள் ஆயினர்.

  இதையும் படிங்க: Tokyo Olympics| வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி: முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்குத் தகுதி

  இந்நிலையில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஆலி ராபின்சன், மார்க் உட் போன்ற பவுலர்களை எப்படி இந்திய ‘நட்சத்திர’ அந்தஸ்துடைய வீரர்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள், அதுவும் கிரீன் டாப் ஆடுகளத்தில்?

  இங்கு வந்து ஸ்பின் பிட்ச் என்ற பெயரில் குழிப்பிட்சைப் போட்டு அகமதாபாத் பகலிரவு இருட்டு ஆட்டத்தில் ஈவு இரக்கமில்லாத ரோடு ரோலர் பிட்சைப் போட்டு 2 நாட்களில் டெஸ்ட்டை முடித்து பெரிய வெற்றி போன்று கொண்டாடியதையெல்லாம் இங்கிலாந்து வேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததே. இப்போது பந்து அவர்கள் கோர்ட்ட்டில்.

  இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் வேட்டைதான், ஆனால் இங்கிலாந்தில் கடைசி வரை பேட்டிங் உள்ளது. இந்திய அணியில் நீண்ட டெய்ல் எண்டர்கள் வரிசை சரியாக ஆட முடியாது போகும் ஏனெனில் இது கிரீன் டாப் பிட்ச்.  இங்கிலாந்து மட்டுமல்ல எந்த ஒரு அணியின் டெய்ல் எண்டர்களை வீழ்த்த இந்திய அணி திணறி வரும் நிலையில், இந்திய அணியின் டெய்ல் எண்டர்களை எதிரணியினர் சுலபமாக காலி செய்து விடுகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் சொத்தை அணியுடன் ஆடியது இந்திய அணி இதிலும் அகர்வால், ரோகித் சர்மா, உள்ளிட்ட வீரர்கள் சொதப்ப ராகுல் மட்டுமே சதம் எடுத்தார். ரிஷப் பந்த்துக்கு பேட்டிங் பயிற்சி இல்லை, விராட் கோலி ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டார்.

  மேட்ச் பிராக்டீஸே இல்லாமல் கிரீன் டாப் பிட்சில் இங்கிலாந்தின் டாப் பவுலர்களை எப்படி இந்தியா சமாளிக்கப்போகிறது என்பதைப் பார்க்க ஆவலாகவே உள்ளது.
  Published by:Muthukumar
  First published: