Home /News /sports /

மீண்டும் படம் காட்டிய அக்சர் படேல், அஸ்வின்: பிட்சைப் புரிந்து கொள்ளாத இங்கிலாந்து 205 ரன்களுக்குச் சுருண்டது

மீண்டும் படம் காட்டிய அக்சர் படேல், அஸ்வின்: பிட்சைப் புரிந்து கொள்ளாத இங்கிலாந்து 205 ரன்களுக்குச் சுருண்டது

அக்‌ஷர் படேலை பார்த்தாலே பதற்றமடைகின்றனர் இங்கிலாந்து என்பதற்கு இணங்க காலையில் சிப்லி, ஜாக் கிராலி என்றால் மதியம் டேன் லாரன்ஸ் மேலேறி வந்து ஸ்டம்ப்டு ஆனார், டாம் பெஸ் மீண்டும் திரும்பாத பந்துக்கு கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். ஜாக் லீச்சை அஸ்வின்  வீழ்த்த இங்கிலாந்து 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மேலும் படிக்கவும் ...
    அகமதாபாத்தில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் அக்சர் படேல், அஸ்வின் அசத்த டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து இன்னொரு புதியபந்து எடுக்கும் வரை தாங்காமல் 205 ரன்களுக்குச் சுருண்டது.

    பென் ஸ்டோக்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 55 ரன்களை எடுத்தார், ஜானி பேர்ஸ்டோ (28), ஆலி போப் (29), டேன் லாரன்ஸ் (46) ஆகியோர் நன்றாகத் தொடங்கி பிறகு புரிதல் இல்லாமல் ஆட்டமிழந்து சென்றனர்.

    அக்சர் படேல் பந்து ஒரு இஞ்ச் கூட திரும்பாது என்பதை கடந்த 2 போட்டிகளில் பார்த்த பிறகும் நேர்நேர் தேமா பந்துகளில் ஆட்டமிழக்கின்றனர்.

    அஸ்வினுக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி பந்து அருமையாகத் திரும்புகிறது, அஸ்வின் பந்து வீச்சில் நாளுக்குநாள் மெருகு கூடிக்கொண்டே வருகிறது, லெந்த்தை மாற்றுகிறார், வேகத்தைக் கூட்டி குறைந்து, பிளைட், டிரிஃப்ட் என்று குழம்பிய இங்கிலாந்து வீரர்களை மேலும் குழப்பி பைத்தியம் பிடிக்கச் செய்வார் போலிருக்கிறது.

    குறிப்பாக பென் ஃபோக்ஸுக்கு நன்றாகத் திரும்பும் பந்துகளை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்து உள்ளே கொண்டு சென்ற அஸ்வின் திடீரென ஒரு பந்தை அதேஇடத்தில் பிட்ச் செய்து திரும்பாமல் நேராகச் செல்லுமாறு அதே கோணத்தில் வீச நன்றாகக் காலைத்தூக்கிப்போட்டு மட்டையை கொண்டு வந்த போக்ஸ் எட்ஜ் ஆகி ரகானேவிடம் தாழ்வான கேட்சுக்கு வெளியேறினார்.

    என்ன பென் ஸ்டோக்ஸ் விக்கெட் இந்த முறை இவருக்கு இல்லை, ஆனால் வாஷிங்டன் சுந்தர் அஸ்வின் பாணியிலேயே ரவுண்ட் த விக்கெட்டில் குட்லெந்தில் பல பந்துகளை வெளியே திருப்பி ஒரு பந்தை அண்டர் கட்டராக நேராக்க ரூட் முன் காலை பந்து பிட்ச் ஆகும் இடத்துக்குக் கொண்டு வராமல் அரைகுறை கால் நகர்த்தலில் எல்.பி.ஆனார்.

    அதே போல் ஆலி போப்பை அஸ்வின் வீழ்த்தியதும் ஒர்க் அவுட் செய்து வீழ்த்தினார், ஆலி போப் தொடர்ந்து டவுன் த விக்கெட் வந்து ஆடிவந்தார், அஸ்வின் ஒரு பந்தை நன்றாகத் தூக்கி வீசி கொஞ்சம் இழுத்துப் பிடித்தார், பந்து வந்த கோணத்திலிருந்து சற்றே மாறுபட்டு பிட்ச் ஆனதால் ஆலி போப் மட்டையில் பட்டு கால்காப்பில் பட்டு ஷுப்மன் கில்லிடம் ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது.

    அக்‌ஷர் படேலை பார்த்தாலே பதற்றமடைகின்றனர் இங்கிலாந்து என்பதற்கு இணங்க காலையில் சிப்லி, ஜாக் கிராலி என்றால் மதியம் டேன் லாரன்ஸ் மேலேறி வந்து ஸ்டம்ப்டு ஆனார், டாம் பெஸ் மீண்டும் திரும்பாத பந்துக்கு கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். ஜாக் லீச்சை அஸ்வின் வீழ்த்த இங்கிலாந்து 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    சிராஜ் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இந்தியா இன்னும் இன்று குறைந்தது 10 ஓவர்களைச் சந்திக்க வேண்டிய நிலையில் ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே ஷுப்மன் கில் எல்.பி.ஆகி டக் அவுட் ஆனார். நடுவர் இதை நாட் அவுட் என்றிருந்தால் இங்கிலாந்து ரிவியூ வீணாகியிருக்கும், ஆனால் கள நடுவர் கையை உயர்த்தியதால் 3வது நடுவரும் அவுட் என்றார். பின் எதற்காகத்தான் இந்த டீ.ஆர்.எஸ். என்ற கேள்வி எழுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Axar patel, India Vs England, R Ashwin

    அடுத்த செய்தி