அகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து?

அகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து?

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிரிஸ் சில்வர் வுட்

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிரிஸ் சில்வர் வுட் செய்தியாளர்களை காணொலி காட்சி மூலம் சந்தித்து பேசினார்.

  • Share this:
அகமதாபாத் ஆடுகளம் குறித்து ஐசிசி-க்கு இங்கிலாந்து அணி புகார் அளிக்குமா என்ற கேள்விக்கு இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதிலளித்துள்ளார்.

நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரின் பரபரப்பான டாபிக் ஆக மாறியிருப்பது அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தின் ஆடுகளம் தான். சென்னை டெஸ்ட் போட்டியின் போதே பிட்ச் குறித்த விவாதங்கள் எழுந்த நிலையில் அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இரண்டே நாட்களுக்குள் போட்டி முடிவுக்கு வந்ததால் பிட்ச் மீது பலவாறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக இப்போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் 112 மற்றும் 81 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என சிலர் ஆடுகளத்தின் தன்மை குறித்து கடுமையாக சாடினர்.

இருப்பினும் பிட்ச் மீது பழிபோடாமல் ஸ்பின்னர்களின் ஆதிக்கத்தால் தான் இப்போட்டியில் இரண்டு நாட்களுக்குள் முடிவு கிடைத்தது, இதற்கான புகழ் அனைத்தும் ஸ்பின்னர்களையே சேரும் என்று மற்றொரு தரப்பினர் எதிர் வாதத்தை முன் வைக்கின்றனர்.

இதனிடையே இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிரிஸ் சில்வர் வுட் செய்தியாளர்களை காணொலி காட்சி மூலம் சந்தித்து பேசினார்.

அவர் பேசுகையில், “அகமதாபாத் பிட்ச்சில் ஜோ ரூட் 8 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த ஆடுகளத்தின் தன்மை எவ்வாறாக இருந்தாலும் இந்திய அணி இறுதியில் எங்களை விட சிறப்பாகவே விளையாடியது, அதே நேரத்தில் எங்கள் வீரர்கள் இது வரை சந்திக்காத ஒரு உச்சநிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஆடுகளத்தின் தன்மை இன்னும் சிறிது காலம் தாக்குப்பிடித்திருக்கும் என கருதினோம்.” என்றார்.

அப்போது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் அகமதாபாத் பிட்ச் குறித்து ஐசிசி-யிடம் இங்கிலாந்து அணி புகார் அளிக்குமா என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கிரிஸ் சில்வர் வுட், “நாங்கள் திரைக்குப் பின்னால் சில விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவோம், ஆனால் அதே நேரத்தில், மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் போது நாங்கள் தோற்றோம் என்பதால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்தோம்… ஆனால் துரதிர்ஷ்டவசமாக போட்டி முடிந்தது.

எனவே, இப்போது எனது பார்வையில் அடுத்த ஆட்டத்திற்கு நோக்கி கவனம் செல்கிறது, நாங்கள் எவ்வாறு திருத்தங்களைச் செய்து, மெருகேற்றி வந்து தொடரை சமன் செய்ய வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறோம்” என்றார்.
Published by:Arun
First published: