CRICKET INDIA VS ENGLAND AHMEDABAD TEST WASHINGTON SUNDAR STRANDED ON 96 NOT OUT AS INDIA SCORES 365 IN FIRST INNINGS MUT
வாஷிங்டன் சுந்தர் மீண்டும் பரிதாபம்: சதம் வாய்க்காத துரதிர்ஷ்டம், 96 நாட் அவுட்: இந்தியா 365 ரன்கள் குவிப்பு
வாஷிங்டன் சுந்தர்.
சதம் எடுத்திருந்தால் 2002-ல் இங்கிலாந்தில் 8வது நிலையில் இறங்கி அஜித் அகார்கர் அடித்த சதத்துக்குப் பிறகு 8வது டவுனில் சுந்தர் சதம் எடுத்திருப்பார், அது முடியாமல் போனது.
அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் பிரமாதமாக ஆடிவந்த நிலையில் திடீரென 5 பந்துகளில் 3 விக்கெட்டுகள் சரிய வாஷிங்டன் சுந்தர் பரிதாபமாக 96 ரன்களில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்கள் குவித்து 160 ரன்கள் முன்னிலை பெற்றது.
இன்று காலை 294/7 என்று தொடங்கியது இந்திய அணி அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் கொஞ்சம் நிதானித்த பிறகு பவுண்டரிகளை விளாசத் தொடங்கினர், அக்சர் படேல் மேலேறி வந்து ஒரு சிக்சரையும் வாஷிங்டன் சுந்தர் நேராக ஒரு சிக்சரையும் விளாசினர்.
அக்சர் படேல் 97 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 43 ரன்களை எடுத்து வாஷிங்டன் சுந்தர் மிட் ஆனில் ஒரு பந்தை அடிக்க வேகு வேகமாக சிங்கிளுக்கு ஓடினார், அது சுந்தரின் அழைப்பு ஆனால் இவர் ஓடிவிட்டார், திருப்பி வரும்போது ரீச் செய்ய முடியாமல் ரன் அவுட் ஆனார்.
அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மா அனாவசியமாக ஸ்டோக்ஸிடம் எல்.பி.ஆனார். சிராஜ் பவுல்டு ஆனார். இந்தியா 365 ரன்கள், ஆனால் பாவம் சுந்தர் மீண்டும் சதமெடுக்க முடியாமல் ஸ்டேண்ட் கொடுக்க ஆளில்லாமல் 96 ரன்களில் தேங்கினார். இவர் 174 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிக்சர் விளாசினார்.
மிகப்பிரமாதமாக ஜேம்ஸ் ஆண்டர்சனை பவுண்டரி அடித்தார், ஸ்பின்னர்களை இறங்கி வந்து ஆடினார். தேர்ந்த பேட்ஸ்மெனாக சுந்தர் ஆடினார் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. அக்சரும் இவரும் சேர்ந்து 106 ரன்களை 30 ஒவர்களில் சேர்த்தனர்.
சதம் எடுத்திருந்தால் 2002-ல் இங்கிலாந்தில் 8வது நிலையில் இறங்கி அஜித் அகார்கர் அடித்த சதத்துக்குப் பிறகு 8வது டவுனில் சுந்தர் சதம் எடுத்திருப்பார், அது முடியாமல் போனது.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகள், பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள். லீச் 2 விக்கெட்டுகள்.
146/4 என்ற நிலையிலிருந்து இந்திய அணி ரிஷப் பந்த்தின் அதிரடி சதம், வாஷிங்டன் சுந்தரின் 96, அக்சர் படேலின் 43 ரன்கள் மூலம் வலுவான நிலையை எட்டியது.