திருப்பித் தாக்கும் ‘பூமராங்’ குழிபிட்ச்: 46 ரன்களுக்கு 7 விக்கெட் காலி; ரூட்டையே ஆட முடியவில்லை: இந்தியா 145 ஆல் அவுட்

திருப்பித் தாக்கும் ‘பூமராங்’ குழிபிட்ச்: 46 ரன்களுக்கு 7 விக்கெட் காலி; ரூட்டையே ஆட முடியவில்லை: இந்தியா 145 ஆல் அவுட்

ஜோ ரூட் முதல் 5 விக்கெட்.

33 ஓவர்களில் 99/3 என்று தொடங்கிய இந்திய அணி குழிப்பிட்ச் பூமராங்காக அடுத்த 20.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை 46 ரன்களுக்கு இழந்து காலியானது.

  • Share this:
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்குச் சுருண்டது.

ஆனால் இந்தப் பிட்சில் 33 ரன்கள் முன்னிலையே பெரிய முன்னிலைதான் என்கிற அளவுக்கு பிட்ச், குண்டுகுழி பிட்ச்சாகி விட்டது. ஜோ ரூட் 8 ரன்களுக்கு 5 விக்கெட். பகுதி நேர பவுலர் ஜோ ரூட்டையே ஆட முடியவில்லை. 98/2 என்ற நிலையில் நேற்று கோலி விக்கெட்டை இழந்தது இந்திய அணி அதோடு சேர்த்து 47 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.

ஜோ ரூட் 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ரூட் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை டெஸ்ட்டில் கைப்பற்றினார்.

இதுதான் உண்மையான பிட்சுக்கும் குண்டுகுழி தூசி தும்பட்டைப் பிட்சுக்கும் உள்ள வித்தியாசம். இன்று மதியம் ரஹானே ஒரு பவுண்டரி அடித்து 7 ரன்களில் இருந்த போது ஜாக் லீச் ரவுண்ட் த விக்கெட்டில் வீசியபந்து ஒன்று சறுக்கிக்கொண்டு ஷூட்டர் போல் வர பின்னால் நின்று ஆட முடிவெடுத்தார் மட்டையை இறக்கும் முன் பந்து கால்காப்பைத்தாக்க பிளம்ப் எல்.பி.

அடுத்ததாக நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த ரோஹித் சர்மா 11 பவுண்டரிகளுடன் 66 ரன்களை எடுத்த நிலையில் கிட்டத்தட்ட ரஹானே பந்து போல் ஷூட்டராக வந்தது ஸ்வீப் ஆட முயன்றார் பந்து இடுப்பில் பட எல்.பி. ஆனார், ரிவியூவும் பயனளிக்கவில்லை. 115/5 என்று ஆனது.

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பந்த் 8 பந்துகள் போராடினார் 1 ரன் எடுத்து கடைசியில் ஜோ ரூட் வீசிய முதல் பந்து நன்றாக பிளைட் ஆகி வர ட்ரைவ் ஆட அழைத்தது பந்து லேசாக திரும்ப ட்ரைவை கட்டுப்படுத்த முடியவில்லை எட்ஜ் ஆனது போக்ஸ் கேட்சை எடுக்க முடிந்தார் பந்த்.

அடுத்து வாஷிங்டன் சுந்தருக்கு மிடில் ஸ்டம்பில் பிளைட் செய்து திருப்பினார் ரூட், சுந்தர் மட்டையைக் கடந்து ஸ்டம்பைப் பதம் பார்க்க டக் அவுட் ஆனார் சுந்தர். அதே ஓவரில் ஒரு பந்து சென்று அக்சர் படேல் இறங்கி வந்து அடிக்கப் போய் கவரில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். ரூட் ரன் கொடுக்காமலேயே 3 விக்கெட். அஸ்வின் 17 ரன்களுக்கு 3 பவுண்டரிகளுடன் நல்ல புரிதலுடன் ஆடினார். ஆனால் அவரும் பொறுமை இழந்து ரூட் பந்தை அடிக்கப் போய் லெக் திசையில் கொஞ்சம் டீப்பில் கேட்ச் ஆனார். இஷாந்த் சர்மா 10 நாட் அவுட் என்று பங்களிக்க பும்ராவும் ரூட் பந்தில் எல்.பி.ஆனார். மொத்தம் 145 ரன்களுக்கு 53.2 ஓவர்களில் ஆட்டமிழந்தது. 33 ரன்கள் முன்னிலை.

33 ஓவர்களில் 99/3 என்று தொடங்கிய இந்திய அணி குழிப்பிட்ச் பூமராங்காக அடுத்த 20.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை 46 ரன்களுக்கு இழந்து காலியானது.
Published by:Muthukumar
First published: