• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியா அபார இன்னிங்ஸ் வெற்றி: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குள் நுழைந்தது; அக்சர் படேல், அஸ்வின் சுழலில் சிக்கி மடிந்த இங்கிலாந்து

இந்தியா அபார இன்னிங்ஸ் வெற்றி: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குள் நுழைந்தது; அக்சர் படேல், அஸ்வின் சுழலில் சிக்கி மடிந்த இங்கிலாந்து

இந்தியா அபார இன்னிங்ஸ் வெற்றி.

இந்தியா அபார இன்னிங்ஸ் வெற்றி.

160 ரன்கள் பின் தங்கியிருந்த இங்கிலாந்து 55 ஓவர்களில் 135 ரன்களுக்குச் சுருண்டது. 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ரவிச்சந்திரன் அஸ்வின் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை சாய்க்க அக்சர் படேல் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

  • Share this:
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3ம் நாளில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. தொடரை 3-1 என்று கைப்பற்றி, இதன் மூலம் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளது.

160 ரன்கள் பின் தங்கியிருந்த இங்கிலாந்து 55 ஓவர்களில் 135 ரன்களுக்குச் சுருண்டது. 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ரவிச்சந்திரன் அஸ்வின் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை சாய்க்க அக்சர் படேல் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஓரளவுக்கு புரிதலோடு ஆடிய டேன் லாரன்ஸ் 95 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து கடைசியில் அஸ்வின் பந்தை ஓங்கி அடிக்க முயன்று பவுல்டு ஆக இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக ரிஷப் பந்த்தும், தொடர் நாயகனாக 32 விக்கெட்டுகளையும் ஒரு சதத்தையும் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டார்.

ரிஷப் பந்த் 101 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 96, அக்சர் படேல் 43 என்று ஆடிய பிட்சில் இங்கிலாந்து ஆடவில்லை என்பது பிட்ச் என்ற சமன்பாட்டை காலி செய்தது. இந்தப் பிட்ச் பேட்டிங் செய்ய முடியாத பிட்ச் அல்ல, இதுதான் இங்கிலாந்துக்கு பெரிய அடியாக இருக்கும்.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றதோடு சரி, அந்த டெஸ்ட்டிலேயே இரண்டாவது இன்னிங்ஸில் 200க்குள் சுருண்டு தொடங்கிய சரிவு இன்று அகமதாபாத் 2வது இன்னிங்ஸ் சரிவு வரை நீடித்தது.

திரும்பும் பந்துகளை நேரே வரும் பந்துகள் என்றும் நேரே வரும் பந்துகளை திரும்பும் பந்துகள் என்றும் மோசமான புரிதலுடன் இங்கிலாந்து ஆடியதே அதன் சரிவுக்குக் காரணம், இரண்டாவது இன்னிங்சில் 55 ஓவர்களைத்தான் இங்கிலாந்து தாங்கியது.

121/5 என்ற நிலையிலும் 146/6 என்ற நிலையிலும் ஒரு செஷனில் டெஸ்ட்டை தோற்றது இங்கிலாந்து. ரிஷப் பந்த்தின் நம்ப முடியாத அதிரடியில் ஒன்றும் செய்ய முடியாது திகைத்தது இங்கிலாந்து, இன்று அஸ்வின், அக்சர் படேல் சுழலுக்கு அவர்களிடம் பதில் இல்லை. அஸ்வி 4 டெஸ்ட்களில் 32 விக்கெட்டுகள் அக்சர் படேல் 3 டெஸ்ட் போட்டியில் 27 விக்கெட்டுகள்.

வாஷிங்டன் சுந்தர் கூறுவது போல் பிட்ச் பேட்டிங்குக்கு நன்றாகவே இருந்தது. சவாலான பிட்ச்தான் ஆனால் நம்மை நாம் சரியாக அப்ளை செய்தால் ஆடக்கூடியதுதான் என்கிறார் வாஷிங்டன் சுந்தர்.

160 ரன்கள் பின் தங்கிய நிலையில் தொடங்கிய இங்கிலாந்து அணி உணவு இடைவேளைக்குப் பிறகு ஆடவந்த போது ஜாக் கிராலியையும் ஜானி பேர்ஸ்டோவையும் அடுத்தடுத்த பந்துகளில் அஸ்வின் வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார், ஆனால் ஹாட்ரிக் கிடைக்கவில்லை, பேர்ஸ்டோவுக்கு லெக் கல்லியை நிறுத்தி வைத்து ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தியது போல் கழற்றி விட்டார் அஸ்வின். டாம் சிப்லி படேல் பந்தில் வீழ்ந்தார்.

பென் ஸ்டோக்ஸ் ஆக்ரோஷமாக ஆட நினைத்து படேல் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று கோலியிடம் அருகிலேயே கேட்ச் ஆனார். ஜோ ரூட் 30 ரன்களுக்கு நன்றாக ஆடினார், ஆனால் அவர் அஸ்வின் பந்தில் நேராக எல்பி ஆகி வெளியேறினார். ஆலி போப் ஒரு சிக்சர் அடித்தார் ஆனாலும் அவர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அக்சர் படேல் பந்தை மேலேறி வந்து ஸ்டம்ப்டு ஆனார். பென் ஃபோக்ஸ், டாம் பெஸ், ஜாக் லீச் ஆகியோர் சடுதியில் வெளியேற இங்கிலாந்து 160 ரன்கள் முன்னிலையைக் கூட கடக்க முடியாமல் 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இதற்கு முன்னர் குறைந்த முன்னிலையில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த ஒரு போட்டியைக் கூறலாம் என்றால் ஒருமுறை வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் 88 ரன்கள் முன்னிலை பெற்று பாகிஸ்தானை 2வது இன்னிங்சில் 78 ரன்களுக்குச் சுருட்டி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அது போல் இதுவும் குறைந்த முன்னிலையை எடுக்க முடியாமல் இங்கிலாந்து தோற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: