அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 24 ரன்களுடனும் ஜானி பேர்ஸ்டோ 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தும் களத்தில் இருக்கின்ரனர். இவர்கள் இருவரும் 44 ரன்களை 4வது விக்கெட்டுக்காகச் சேர்த்துள்ளனர்.
முன்னதாக மீண்டும் அக்சர் படேலின் பவுலிங்கை புரிந்து கொள்ளாமல் தப்பும் தவறுமாக ஆடி இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்தது, இங்கிலாந்து வீரர்களின் உடல் மொழி தன்னம்பிக்கையுடன் இல்லை. குழிபிட்ச் பீதியில் ஆடுகின்றனர், ஆனால் பிட்ச் இதுவரை நன்றாகவே நடந்து கொள்கிறது. கடந்த டெஸ்ட் போட்டியிலும் இப்படித்தான் 74/3 என்று இருந்தனர், பிறகு 112 ரன்களுக்குக் காலியாகினர்.
ஆனால் கோலியின் கேப்டன்சி விசித்திரமாக இருக்கிறது பென் ஸ்டோக்ஸை 11 முறை வீழ்த்தியவர் அஸ்வின், ஆனால் ஸ்டோக்ஸ் இறங்கி அரைமணி நேரம் ஆடிய பிறகு அஸ்வினை மிக தாமதமாக 20வது ஓவரில் சாவகாசமாக கொண்டுவந்தார்.
ஸ்டோக்ஸ் அவரை கிளீனாக லாங் ஆஃப் மேல் சிக்சருக்குத் தூக்கினார்.
முன்னதாக இஷாந்த் சர்மா பந்தை நன்றாக இன்ஸ்விங் செய்தார், அவுட்ஸ்விங்கும் பிரமாதமாக வீசினார், சிராஜ் அவரை விடவும் அற்புதமாக வீசினார். ஆனால் அக்சர் படேல் வந்தவுடன் சிப்லி தன் தவறை இன்னும் திருத்திக் கொள்ளவில்லை என்பது போல் ஆடினார். அக்சர் படேல் பந்து திரும்பாது என்று கூடவா இன்னும் அவருக்கு புரியவில்லை. அதே போல் ரவுண்ட் த விக்கெட்டில் நேர்நேர் தேமா பந்தில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார்.
ஜாக் கிராலி கடந்த டெஸ்ட் போட்டியில் அருமையான அரை சதம் அடித்தவர் அக்சரைக் கண்டவுடன் பதற்றமடையத் தொடங்கினார் மேலேறி வந்து ஒரு நேர் பவுண்டரியை தரையோடு தரையாக அடித்தவர் அடுத்த முறை மேலேறி வந்தார், அக்சர் லெந்தைக்குறைத்தார் கிராலி தூக்கி அடிக்க முயன்று மிட் ஆஃபில் சிராஜிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இங்கிலாந்து 15/2 என்று ஆனது.
ஜோ ரூட் 5 ரன்களில் சிராஜ் இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார். அது என்ன கிரீசில் நின்ற படியே கால்களை நகர்த்தாமல் ஆடும் உத்தி என்று தெரியவில்லை. பிளம்ப் எல்.பி.ஆனார். ஸ்டோக்ஸ் இறங்கி சிராஜை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார், அதில் ஒன்று உண்மையான எட்ஜ் ஆகிச் சென்றது சிராஜுக்கும் ஸ்டோக்ஸுக்கும் ஏதோ ஸ்லெட்ஜிங் வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
அஸ்வினை தாமதமாகக் கொண்டு வந்தது ஏன் என்று புரியவில்லை. 11 முறை ஸ்டோக்ஸை வீழ்த்தியிருக்கிறார், இதுதான் கோலி போன்றவர்களின் புரியாத கேப்டன்சி, ரஹானே இவரை விடவும் கொஞ்சம் புத்திசாலி கேப்டன் என்பது புரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ahmedabad, Axar patel, Captain Virat Kohli, India Vs England, R Ashwin